கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்து தீவிரவாதி என விமர்சனம்.. அரவக்குறிச்சியில் இன்று கமல் பிரச்சாரம்திடீர் ரத்து

Google Oneindia Tamil News

Recommended Video

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்

    அரவக்குறிச்சி: இந்து தீவிரவாதி என விமர்சனம் செய்ததை அடுத்து அரவக்குறிச்சியில் இன்று கமல் மேற்கொள்ளவிருந்த பிரசாரம் திடீரென ரத்தானது.

    அரவக்குறிச்சியில் பள்ளப்பட்டியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து.

    Kamal Haasans election campaign cancelled

    அவரது பெயர் நாதுராம் கோட்சே. இங்கு முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை என்றார் கமல். இந்த நிலையில் இந்துக்களை தீவிரவாதி என கமல் கூறியதாக அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    ஃபேஸ்புக் கருத்துகளால் இலங்கையில் வன்முறை.. மதக்கலவரத்தை தடுக்க சமூக வலைதளங்கள் முடக்கம் ஃபேஸ்புக் கருத்துகளால் இலங்கையில் வன்முறை.. மதக்கலவரத்தை தடுக்க சமூக வலைதளங்கள் முடக்கம்

    கமலின் இந்த பேச்சுக்கு தமிழிசை சவுந்திரராஜனும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறுகையில் இந்து தீவிரவாதம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் கமல்ஹாசனைக் கண்டிக்கிறோம்.

    பள்ளபட்டியில் சிறுபான்மை மக்கள் நடுவில் நின்றுகொண்டு மத உணர்வுகளைத்தூண்டி கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும்இவர்மீது தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் அரவக்குறிச்சியில் இன்று கமல்ஹாசன் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு எழுந்துள்ளது.

    English summary
    Kamal Haasan's election campaign cancelled after he stated that First terrorist of independent India was a Hindu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X