கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புனிதாவுக்கு 321.. எனக்கு 182 தானா.. தாங்கிக் கொள்ள முடியாத உஷா.. கண்ணீர் ததும்ப.. சோகக் காட்சி!

தேர்தலில் தோற்றதால் கண்ணீருடன் பெண் வேட்பாளர் சென்றார்

Google Oneindia Tamil News

கரூர்: சீப்பு சின்னத்தில் உஷாவும், சாவி சின்னத்தில் புனிதாவும், போட்டியிட்டனர்.. ஆனால் உஷா தோல்வியடைந்துவிட்டார்.. இதனால் அழுதுகொண்டே பூத்தில் இருந்து வெளியேறினார் உஷா!

27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்து முடிந்தது.. 2 கட்டமாக 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடந்த தேர்தலின்போது பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று மொத்தம் 315 மையங்களில் நடந்து வருகிறது.

karur candidate usha defeated in local body election

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேட்பாளர்களாக களம் இறங்கினர்.

எப்பவும்போல் இல்லாமல் இந்த முறை தேர்தல் மிக மிக வித்தியாசமாக நடந்தது.. வேட்பாளர்களுக்குள் கடுமையான போட்டி ஏற்பட்டது.. அப்படித்தான் கரூர் மாவட்டத்திலும் போட்டி நடந்தது.. இதில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், ரெங்கநாதபுரம் ஊராட்சி 1-வது வார்டில் போட்டியிட்டவர் உஷா.. இவர் சீப்பு சின்னத்தில் போட்டியிட்டார்.. இவரை எதிர்த்து புனிதா என்பவர் போட்டியிட்டார்.. இவர் சாவி சின்னத்தில் போட்டியிட்டார்.

விளாத்திக்குளத்தில் 3 பெட்டிகளை காணவில்லை.. திமுக வெற்றியை தடுக்க சதி.. ஸ்டாலின் பரபரப்பு புகார் விளாத்திக்குளத்தில் 3 பெட்டிகளை காணவில்லை.. திமுக வெற்றியை தடுக்க சதி.. ஸ்டாலின் பரபரப்பு புகார்

புலியூர் ராணி மெய்யம்மை மெட்ரிக் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.. இந்த வாக்கு எண்ணிக்கையின்போது, புனிதாவின் கணவர் கந்தசாமி அவரது முகவராக கூடவே வந்திருந்தார். அதுபோலவே உஷாவும் வந்திருந்தார்.

எண்ணிக்கையின் முடிவில், புனிதா 321 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் உஷா 182 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ஓட்டுகள் எண்ணப்பட்டு, தான் தோல்வி அடைந்ததை தாங்கி கொள்ளவே முடியாத உஷா, பூத்திலேயே கண்கலங்கிவிட்டார்.. அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல், அழுது கொண்டே பூத்தை விட்டு வெளியேறினார்.

English summary
krishnaburam candidate usha defeated in localbody election and cried in karur district
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X