கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லீவெல்லாம் கிடையாது தம்பி … பள்ளிக்கு போய் படிங்க…! அறிவுரை கூறிய கரூர் ஆட்சியர்..!

Google Oneindia Tamil News

கரூர்: மழை பெய்வதால் ட்விட்டர் மூலம் பள்ளிகளுக்கு விடுமுறை கேட்ட மாணவனுக்கு, பள்ளிக்கு போங்க தம்பி, நிறைய படிக்க வேண்டி இருக்கு என கரூர் மாவட்ட ஆட்சியர் சுவாரசியமாக பதிலளித்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

வங்கக்கடலில் நிலவிவரும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. குறிப்பாக மதுரை , தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி , ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அதிகமாக பாதிக்கப்பட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது..

Karur Collector has advised a student who asked for school holidays on Twitter

இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கனமழை காரணமாக மதுரை நாமக்கல் உள்ளிட்ட பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சூழ்நிலையை பொறுத்து விடுமுறை அளித்து வருகின்றனர்..

பள்ளி கட்டணம் கட்டாமல் TC வாங்கினால் இனி சிக்கல்.. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பள்ளி கட்டணம் கட்டாமல் TC வாங்கினால் இனி சிக்கல்.. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் கன மழை பெய்து வருவதாக விடுமுறை கேட்டார். அந்த மாணவனுக்கு பதிலளித்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர், விடுமுறைக்காக உங்கள் தொடர்ச்சியான பிரார்த்தனைகளுக்கு நன்றி, நம்முடைய மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது, எனவே பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படும் விடுமுறையை பயன்படுத்தி வீட்டுப்பாடத்தை முடியுங்கள், ஆசிரியர்கள் அதனை சரி பார்ப்பார்கள் பாதுகாப்பாக இருங்கள் என பதில் தெரிவித்தார்..

Karur Collector has advised a student who asked for school holidays on Twitter

இந்த ட்விட் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் இதே பாணியை பின்பற்றி கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை டேக் செய்து டுவிட்டரில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் விடுமுறை கேட்டுள்ளார்.. அந்தப் பதிவில் கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது ஆகையால் இன்று மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா இங்கனம் என அந்த மாணவனின் பெயரும், பனிரெண்டாம் வகுப்பு மாணவன் என குறிப்பிடப்பட்டிருந்தது..

Karur Collector has advised a student who asked for school holidays on Twitter

மாணவனின் டுவிட்டர் பதிவுக்கு சுவாரசியமாக பதிலளித்துள்ள கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், தற்போது மழை குறைந்து விட்டது பள்ளிக்கு கிளம்பி போங்க தம்பி நண்பர்களையும் கிளம்ப சொல்லுங்க நிறைய படிக்க வேண்டி இருக்கு என பதிலளித்துள்ளார். மாணவனின் கேள்வியும் ஆட்சியரின் பதிலும் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது..

English summary
The Karur District Collector has given an interesting response to a student who asked for a school holiday on Twitter due to the rain, saying that he has to go to school and study a lot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X