கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பொம்பளை பிள்ளையை வச்சுக்கிட்டு.. இப்படி ரோட்டுல வரலாமாம்மா?".. கரூரை கலக்கும் எஸ்பி!

எஸ்பி விக்ரமனின் ஹெல்மெட் விழிப்புணர்வு மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    'இப்படி ரோட்டுல வரலாமாம்மா?'.. கரூரை கலக்கும் எஸ்பி! | Karur SP actions on helmet awareness

    கரூர்: "பொம்பளை பிள்ளையை வச்சுக்கிட்டு.. இப்படி ரோடுல வரலாமாம்மா?" என்று கரூர் எஸ்பி கேள்வி கேட்கவும்தான், தன் தவறை ஒப்புக்கொண்டார் அந்த தாய்.. ஆம்.. ஹெல்மட் போடாதவர்கள் யாரும் இவர் கண்ணில் சிக்க முடியாது.. அந்த அளவுக்கு வளைச்சு வளைச்சு பிடித்து கையில் ஹெல்மட் தந்து போட்டுவிடுகிறார் எஸ்பி விக்கிரமன்!

    மாவட்ட எஸ்பியாக வந்து கொஞ்ச நாள்தான் ஆச்ச.. ஆனால் பொறுப்பேற்ற நாளில் இருந்தே கரூரையே கலக்கி வருகிறார் இவர்!

    இப்போது சமீபத்தில் ஹெல்மட் போடாதவங்க மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள் என்று கோர்ட் சொல்லவும், மாநிலம் முழுவதும் போலீசார் துரித வேலையில் இறங்கி வருகிறார்கள். பொதுவாக, கண்டிப்பும், முறைப்புமாகத்தான் இப்படிப்பட்ட வாகன சோதனைகள் பெரும்பாலும் நடைபெறும்.

     EXCLUSIVE: இளையராஜா - எஸ்.பி.பி.. இவங்களுக்குள்ள என்னதான் பிரச்சனை.. மனம் திறக்கிறார் மனோ EXCLUSIVE: இளையராஜா - எஸ்.பி.பி.. இவங்களுக்குள்ள என்னதான் பிரச்சனை.. மனம் திறக்கிறார் மனோ

    பிரச்சனைகள்

    பிரச்சனைகள்

    ஆனால் நம்ம கரூர் எஸ்பி வேற லெவல்.. இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லையா? அதனால்தான் ஹெல்மட் இல்லாமல் யார் வந்தாலும் உருக்கமான வேண்டுகோளை விடுத்து, அவர்களின் மனசை அடியோடு மாற்றி திருத்துகிறார்.

    தாய்-மகள்

    தாய்-மகள்

    இப்படித்தான், சோதனையில் இருந்தபோது, ஒரு அம்மா தன் மகளை பைக்கின் பின்னால் உட்காரவைத்து கொண்டு ஓட்டி வருகிறார். ரெண்டு பேருமே ஹெல்மட் போடல. எஸ்பியும் இதனை பார்த்துவிட்டு, வண்டியை ஓரங்கட்ட சொன்னார்.

    தாயின் தவறு

    தாயின் தவறு

    "ஏம்மா.. பொம்பளை பிள்ளை வச்சுக்கிட்டு இப்படி ஹெல்மெட் இல்லாமல் வரலாமா? உங்களை விடுங்க.. உங்க பொண்ணுக்காவது ஹெல்மெட் வேணாமா" என்று கேட்க... அந்த அம்மாவோ, இன்னும் ஹெல்மட் வாங்கவில்லை என்று விளக்கம் சொல்ல.. எஸ்பியோ, காவல்துறை சார்பில் ஒரு ஹெல்மட் அந்தம்மாவுக்கு கொடுங்க என்று கேட்க.. ஹெல்மெட்டும் மகளிடம் தரப்பட்டது.

    வித்தியாசம்

    வித்தியாசம்

    மகளிடம் எஸ்பி, "உங்கம்மா தலையிலே நீயே இதை மாட்டிவிடும்மா" என்று சொல்ல, மகளும் அம்மாவுக்கு ஹெல்மெட் போட்டபடியே தவறை உணர்ந்து பைக்கை எடுத்து கிளம்புகிறார். இப்படி ஹெல்மெட் பிரச்சனை என்றில்லால்.. விக்ரமன் பொதுமக்களை அணுகும்முறையே வித்தியாசமாக இருந்து வருவதால், அனைத்து தரப்பு பாராட்டும் இவருக்கு எக்கச்சக்கமாக கிடைத்து வருகிறது.

    English summary
    All of Karur District SP Vikraman's actions on helmet awareness are attracting the Public
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X