• search
கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

செந்தில்பாலாஜியால் அதிமுகவில் இணையும் கரூர் திமுகவினர்... எடுபடாத கே.என்.நேரு பஞ்சாயத்து

|

கரூர்: கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜியின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

செந்தில்பாலாஜி இன்னும் அமைச்சர் என்ற தோரணையிலேயே சுற்றிவருவதாகவும், அவரை கட்சிக்காரர்கள் உள்ளிட்ட யாரும் அவ்வளவு எளிதாக அணுக முடியவில்லை எனவும் கரூர் திமுகவில் புகார் எழுந்துள்ளது.

மேலும், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் செந்தில்பாலாஜிக்கும் இருக்கும் அதிகார சண்டையில் அப்பாவி திமுகவினர் பலிகடா ஆக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிம்மதியின்றி தவிக்கும் செந்தில்பாலாஜி... குடைந்தெடுக்கும் மத்திய குற்றப்பிரிவு

கோஷ்டிப் பூசல்

கோஷ்டிப் பூசல்

கரூர் திமுகவை பொறுத்தவரை வாசுகி முருகேசன் மறைவுக்கு பிறகு பல கோஷ்டிகள் உருவெடுத்துவிட்டன. கே.சி.பி., கரூர் சின்னச்சாமி, வாசுகி முருகேசன் தம்பி ரவிக்குமார், நன்னியூர் ராஜேந்திரன் என ஏற்கனவே உள்ள கோஷ்டி அரசியல் வரிசையில் புதிய வரவு செந்தில்பாலாஜி கோஷ்டி. அதிமுகவில் இருந்து அமமுகவுக்கு சென்று அங்கிருந்து திமுகவுக்கு வந்தவர் செந்தில்பாலாஜி. இவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது முதலே கரூர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் கலகம் நடந்து வருகிறது.

பிம்பம் கட்டமைத்தல்

பிம்பம் கட்டமைத்தல்

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய கரூர் திமுகவினர் சிலர், ''திமுக தலைமையின் நெருங்கிய வட்டத்தில் தாம் இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துவதற்காக, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை அழைத்துவந்து இரண்டு மூன்று நிகழ்ச்சிகளை நடத்தினார். செந்தில்பாலாஜி எந்தக் கட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சி தலைமையின் நெருங்கி வட்டத்திற்குள் தானும் இருப்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை கரூரில் உருவாக்கிவிடுவார்''.

சமாதானம்

சமாதானம்

மேலும் தொடர்ந்து பேசிய அவர், ''செந்தில்பாலாஜியின் நடவடிக்கைகள் பிடிக்காமல் முன்னாள் அமைச்சர் கரூர் சின்னச்சாமி சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இணைய முடிவெடுத்துவிட்டார். பின்னர் இது எப்படியோ தலைமைக்கு தெரிந்து செந்தில்பாலாஜியை அனுப்பி சமாதானம் செய்தார்கள். செந்தில்பாலாஜிக்கு அவர் மீதுள்ள வழக்குகளை சமாளிக்கவே நேரம் சரியாக உள்ளது. இதில் எப்படி அவர் கட்சி வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுவார்.''

குறிப்பிட்ட சிலர்

குறிப்பிட்ட சிலர்

''செந்தில்பாலாஜியை கட்சிக்காரர்கள் ஒரு அவசரத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் கூட முடியாது. ஒன்று அவரது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கும், இல்லையென்றால் அழைப்பு ஏற்கப்படவில்லை என பதில் வரும். இது குறித்த புகார் தலைமைக்கு சென்றதால் இப்போது தான் தனக்கு வரும் அழைப்புகளை அவர் ஏற்கிறார். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் இவருக்கும் இருக்கும் அதிகாரச்சண்டையில் கட்சியை பலிகடாவாக்கி வருகிறார்''.

கட்சிப்பதவி

கட்சிப்பதவி

''செந்தில்பாலாஜியை நீங்கள் கவனித்து பார்த்தால் தெரியும் அவரை சுற்றி அமமுகவில் இருந்து தன்னுடன் திமுகவில் இணைந்தவர்களே இருப்பார்கள். அவர்களை மட்டும் தான் தன்னுடன் வைத்துக்கொள்வார், காரில் ஏற்றிக்கொண்டு சுற்றுவார். பரம்பரை பரம்பரையாக திமுகவில் இருப்பவனை அவர் கண்டுகொள்ளவும் மாட்டார், எங்களை போன்ற ஆட்களுக்கு பதவியும் கொடுக்கமாட்டார் அவர்.''

கட்சி தாவல்

கட்சி தாவல்

செந்தில்பாலாஜியின் செயல்பாடுகள் பிடிக்காமல் கரூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்தவரும், தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சிலில் முக்கிய பொறுப்பில் உள்ளவருமான மாரப்பன் அண்மையில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்துவிட்டார். இன்னும் பலர் இணையலாமா என யோசித்துக் கொண்டு இருக்கின்றனர். இது தொடர்பாக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு செய்த பஞ்சாயத்து இங்கு எடுபடவில்லை.'' என அந்த நிர்வாகி தனது உள்ளக்குமுறலை நம்மிடம் கொட்டினார்.

 
 
 
English summary
karur dmk members complaint about senthilbalaji
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X