• search
கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"ஹோமோ" கொலை.. காட்டுக்குள் 13 வயது சிறுவனை சீரழித்து கொன்ற இளைஞருக்கு ஆயுள்.. கரூர் மகிளா அதிரடி

|

கரூர்: சாக்லேட் காட்டியே ஒரு சிறுவனை நாசம் செய்து.. கொன்றே விட்டார் இளைஞர் ஒருவர்.. அவருக்குதான் ஆயுள் தண்டனையை வழங்கி பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது கரூர் மகிளா கோர்ட்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் தினேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 8-ம் வகுப்பு படித்து வந்தார்.. கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், ஸ்கூலுக்கு போய்விட்டு திரும்பி வரும்போது, அதே பகுதியை சேர்ந்த பிரதீப் என்பவர் எதிரே வந்தார். பிரதீப் ஒரு மினி பஸ் கண்டக்டர்.. 21 வயதுதான் ஆகிறது.

karur mahila court ordered life sentence to 21 year old mini bus conductor

தினேஷை பார்த்ததும் பிரதீப் சாக்லேட் வாங்கி தருவதாக சொன்னார்.. அதை நம்பி தினேஷும் பின்னாடியே போனான்.. அப்படியே காட்டுப்பகுதிக்கு தினேஷை அழைத்து சென்றுவிட்டார் பிரதீப்... அந்த காட்டுக்குள் வலுக்கட்டாயமாக தினேஷை "ஹோமோ"வில் ஈடுபடுத்தி இச்சையை தீர்த்து கொண்டுள்ளார்.

பிறகு நடந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டினார்.. ஆனாலும் சிறுவன் இதை பற்றி சொல்லி விட்டால் ஆபத்தாயிற்றே என்று பயந்துபோன பிரதீப், அங்கேயே ஒரு துணியால் தினேஷின் வாய், மூக்கை அழுத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

ஸ்கூலுக்கு போன பையனை காணோமே என்று வீட்டில் இருந்தோர் தேடினர்.. பிறகுதான் சீத்தைக்காட்டில் பிணமாக கிடப்பதை அறிந்து அலறினர்.. க.பரமத்தி போலீஸிலும் புகார் தந்தனர்.. அதனடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு.. இறுதியில் பிரதீப்பை போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலை அன்று கரூரையே நிலைகுலைய வைத்தது.. இது சம்பந்தமான வழக்கும் கரூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், விசாரணையும் முடிவடைந்தது.. பின்னர் நீதிபதி சசிகலா தீர்ப்பு வழங்கினார். அதில், இந்த குற்றத்திற்காக பிரதீப்புக்கு வாழ்நாள் சிறை தண்டனையுடன், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. ஒருவேளை அபராதம் கட்ட தவறினால், இன்னும் ஒரு மாதம் ஜெயில் வழங்கப்படுவதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

"வீட்டை விட்டு போக முடியலையே" முனியம்மாளிடம் கலங்கிய மீன் வியாபாரி.. ஒரே குடும்பத்தில் 3பேர் தற்கொலை

  சூரியனின் மேற்பரப்பு இப்படித்தான் இருக்கும் | New solar telescope produces images of sun's surface

  இந்த தண்டனையை பிரதீப், ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் இறந்து போன சிறுவன் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி சசிகலா தீர்ப்பில் கூறினார். தன் காம இச்சைக்காக சிறுவனை கொன்ற சம்பவத்தினால், 21 வயது மினிபஸ் கண்டக்டர் வாழ்நாள் முழுசும் ஜெயிலிலேயே இனி கழிப்பார்!

   
   
   
  English summary
  karur mahila court ordered, life sentence to 21 year old mini bus conductor over 13 year old boy murder case issue
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X