ஸ்கூல் படிக்கும் பெண்ணுடன் பழக்கம்.. சலூன் கடைக்காரரை ஓட ஓட விரட்டி.. நடுக்கத்தில் கரூர்!
கரூர்: சலூன் கடைக்காரரை ஓட ஓட வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை கரூரில் ஏற்படுத்தி வருகிறது.. தீவைப்பு, மறியல், போராட்டம், கைது நடவடிக்கை என அடுத்தடுத்த சம்பவங்கள் தொடர் பரபரப்பில் அம்மாவட்ட மக்களை வைத்து வருகிறது.

கரூர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராம்... இவரது மகன் ஹரிஹரன்.. 22 வயதாகிறது.. சொந்தமாக ஒரு சலூன் கடையை வைத்து நடத்தி வந்தார்... இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார்..
அந்த பெண் ஸ்கூல் படித்து வருகிறாராம்.. பெண்ணின் அப்பா வேலன் என்பவர் பழைய இரும்பு பேப்பர் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்..
ஹரிஹரனும் அந்த பெண்ணும் 2 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.. ஒருகட்டத்தில் இந்த லவ் மேட்டர் வீட்டுக்கு தெரியவரவும், பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த சமயத்தில்தான் லாக்டவுன் போடப்பட்டது..

காதல்
ஸ்கூல்கள் மூடப்பட்டுள்ளதால், வீட்டிலேயே இருந்த மகளிடம், காதலை கைவிடும்படி பெற்றோர் அட்வைஸ் தந்தபடியே இருக்கவும், அந்த பெண்ணும் மனசு மாறி உள்ளார். அதற்கேற்றபடி, வீட்டிலேயே இத்தனை மாதமும் இருந்துவிட்டதால், ஹரிஹரனிடமும் அந்த பெண் பேசவில்லை. இந்நிலையில், பள்ளிப்படிப்பை முடித்து, காலேஜ் சேர்ந்திருக்கிறார் அந்த பெண்.. 2 மாசமாகிறதாம்.

அட்வைஸ்
காலேஜுக்கு அவர் சென்றதை அறிந்து, பின்னாடியே ஹரிஹரன் சென்று ஏன் பேசவில்லை என்று கேள்வி கேட்டுள்ளார்.. தினமும் தன் பின்னாடியே வருவதை, பெற்றோரிடம் மகளும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஹரிஹரனுக்கு அட்வைஸ் தரலாம் என்று நேற்று சாயங்காலம் பசுபதீஸ்வரர் கோவிலுக்கு பெண்ணின் உறவினர்கள் வரவழைத்தனர்.. அதன்படியே ஹரிஹரனும் வந்தபோது, தங்கள் மகளை விட்டுவிடும்படி கேட்டனர்.. அதற்கு ஹரிஹரன் மறுக்கவும், வாக்குவாதம் முற்றியுள்ளது.

3 பேர் கைது
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பெண்ணின் பெரியப்பா சங்கர் உட்பட பலரும் ஹரிஹரனை தாக்கி உள்ளனர்.. இதில் ஆவேசமடைந்த சங்கர், கத்தியை எடுத்து ஹரிஹரனை குத்த முயன்றார்.. ஆனால் அவர் தப்பி ஓட முயன்றதும், விரட்டி விரட்டியே ஹரிஹரனின் முதுகில் குத்தி விட்டார்.. இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த ஹரிஹரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு, கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. ஆனால், ஹரிஹரன் இறந்துவிட்டார்.

வழக்கு பதிவு
இதுகுறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸார் பெரியப்பா சங்கர் உட்பட தாய்மாமன் கார்த்திகேயன், மாமா வெள்ளச்சாமியை கைது செய்தனர்.. தப்பி ஓடிய பெண்ணின் அப்பா வேலன், சித்தப்பா முத்துவை தேடி வருகின்றனர்.. இவர்களின் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. கைதான சங்கருக்கு அரசியல் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.. பின்புலம் என்னவென்றும் தெரியாததால் விசாரணை நடந்து வருகிறது.

மர்ம கும்பல்
இதனிடையே, வேலன் நடத்தி வந்த அந்த இரும்புக்கடைக்கு ஒரு மர்ம கும்பல் சென்று அந்த கடையை அடித்து நொறுக்கி உள்ளது.. மேலும் கடையின் முன்பு டயரை கொளுத்திவிட்டும் சென்றுள்ளது.. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.. வேறு எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாதவாறு போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.. இந்நிலையில், இத்தனை கொடுமைக்கும் முக்கிய காரணமே அந்த காதலிதான்.. அதனால் அந்த பெண்ணையும் கைது செய்ய வேண்டும் என்று கோரி இளைஞரின் சொந்தக்கார்கள் கரூர் திருச்சி மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு மேலும் அதிகமாகி உள்ளது.