கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்களை பாஜக திட்டினாங்க.. பதிலுக்கு நாங்களும் பேசினோம்… இப்போ எல்லாம் ஓவர்… தம்பிதுரை கலகல

Google Oneindia Tamil News

கரூர்: எங்களை திட்டியதால் பதிலுக்கு பாஜகவை திட்டியதாகவும், தமிழகத்துக்கு மோடி அரசு நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளதால் கூட்டணி வைத்திருப்பதாகவும் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் கூட்டணி இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்திருக்கின்றன. தேமுதிகவின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஏற்கனவே இருக்கிறது. 10 தொகுதிகள் ஒதுக்கீடும் செய்யப்பட்டுவிட்டது. விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஐஜேகே திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.

 வர்றவங்கெல்லாம் டாக்டராவே இருக்காங்களே.. நாடித்துடிப்பை நச்சுன்னு பார்ப்பாங்கல்ல.. குஷியில் அதிமுக வர்றவங்கெல்லாம் டாக்டராவே இருக்காங்களே.. நாடித்துடிப்பை நச்சுன்னு பார்ப்பாங்கல்ல.. குஷியில் அதிமுக

பாஜகவின் திட்டங்கள்

பாஜகவின் திட்டங்கள்

இந் நிலையில், எங்களை திட்டியதால் பதிலுக்கு பாஜகவை திட்டியதாகவும், தமிழகத்துக்கு மோடி அரசு நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளதால் கூட்டணி வைத்திருப்பதாகவும் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியிருக்கிறார்.

அடிக்கல் நாட்டினார்

அடிக்கல் நாட்டினார்

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 85 கோடி ரூபாய் செலவிலான மக்கள் நலத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

மத்திய அரசு நடவடிக்கை

மத்திய அரசு நடவடிக்கை

அப்போது அவர் கூறியதாவது:அதில், தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகிறீர்கள்? நடவடிக்கை எடுத்தால் வாக்கு வங்கிக்காக நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று கூறுகிறீர்கள்?

பாராட்டி பேசினார்

பாராட்டி பேசினார்

பிரதமர் மோடி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் திட்டங்களையும் பாராட்டி பேசியுள்ளார். தமிழகத்தில் உள்ள பாஜகவினர், அதிமுக அரசை விமர்சித்து பேசியதால்தான் தானும் பாஜகவை விமர்சித்து பேசினேன்.

நிறைய திட்டங்கள்

நிறைய திட்டங்கள்

அதிமுகவின் கோரிக்கைகளை மோடி அரசு நிறைவேற்றி வருகிறது. எனவே இந்த கூட்டணி வளர்ந்தால், தமிழகத்திற்கு இன்னும் நிறைய திட்டங்கள் கிடைக்கும்.

திமுகவை வீழ்த்த கூட்டணி

திமுகவை வீழ்த்த கூட்டணி

அதுமட்டுமின்றி தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதுதான் முதல் நோக்கம். அதனால தான்... நாங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்று கூறினார்.

English summary
Loksabha deputy speaker and AIADMK leader thambidurai explains why his party alliances with bjp.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X