கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி போட்டியிடுவார்... பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி போட்டியிடுவார் - ஸ்டாலின் பேச்சு

    கரூர்: அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில், செந்தில்பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெறுவார் என பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதைக் கேட்டு திமுகவினர் அதிருப்தியடைந்துள்ளனர்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சமீபத்தில் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் சேர்ந்த கையோடு, பிரிந்து திமுகவில் இணைந்தார்.

    நாடாளுமன்றத் தேர்தலோடு 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளிலும் இடைத்தேர்தலை விரைந்து நடத்த திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    ஸ்டாலின் பிரச்சாரம்

    ஸ்டாலின் பிரச்சாரம்

    இந்தநிலையில், கரூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணி போட்டி போட்டியிடுகிறார் . அவருக்கு ஓட்டு கேட்டு ஸ்டாலின் பங்கேற்ற பொதுக்கூட்டம் கரூர் அருகே ராயனூரில் நேற்று முன்தினம் நடந்தது.

    லோக்சபா தேர்தலில் இவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்.. இது மக்களின் கருத்து கணிப்பு!

    திடீர் அறிவிப்பு

    திடீர் அறிவிப்பு

    அதில், அவர் பேசுகையில்: அரவக்குறிச்சி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கும் என்றும், அதில் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெறுவார் எனவும், பேச்சோடு பேச்சாக தெரிவித்தார். இந்த திடீர் அறிவிப்பால், திமுக மூத்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

    திமுக ரேஸிலேயே கிடையாது... 2வது, 3வது இடம் யாருன்ணு பாருங்க.. டிடிவி பேட்டி திமுக ரேஸிலேயே கிடையாது... 2வது, 3வது இடம் யாருன்ணு பாருங்க.. டிடிவி பேட்டி

    செந்தில்பாலாஜி விருப்ப மனு

    செந்தில்பாலாஜி விருப்ப மனு

    அரவக்குறிச்சி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் தேதி, அறிவிக்கப்பட்டவுடன் அரவக்குறிச்சி தொகுதிக்கும் விருப்ப மனு வழங்கப்பட்டது. அப்போது செந்தில் பாலாஜி உட்பட பலர் விருப்ப மனு கொடுத்தனர். இந்த நிலையில் செந்தில் பாலாஜி போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திமுக நிர்வாகிகள் புலம்பல்

    திமுக நிர்வாகிகள் புலம்பல்

    செந்தில் பாலாஜிக்கு கட்சியில் சேர்ந்த 40 நாளில் மாவட்ட பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. தற்போது அரவக்குறிச்சி தொகுதியில் சீட்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கட்சித் தலைமை ஏன் முக்கியத்துவம் தருகிறது என்று தெரியவில்லை என திமுக நிர்வாகிகள் புலம்பி தவிக்கின்றனர்.

    English summary
    DMK leader m k Stalin sudden announcement of aravakurichi by election candidate who senthil Balaji
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X