கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நன்னியூர் டீக்கடை மக்களே.. உள்ளே போய் பார்த்தா திண்ணையில் நம்ம அமைச்சர்.. கையில் பேப்பருடன்!

நன்னியூர் டீக்கடையில் டீ குடித்தார் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்.

Google Oneindia Tamil News

கரூர்: தெருவில் சென்று கொண்டிருக்கும் கிராம மக்கள் பார்வை முழுவதும் அந்த டீக்கடையை நோக்கியே போனது.. காரணம்.. டீக்கடை பெஞ்ச்சில் உட்கார்ந்து பேப்பர் படித்து கொண்டு இருந்தது நம்ம அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்தான்!

அரவக்குறிச்சியில் திமுக தரப்பில் செந்தில்பாலாஜி களம் இறக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பாக செந்தில்நாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

செந்தில்பாலாஜியை தோற்கடிக்க 10 பேர் கொண்ட குழு அதிமுக தலைமையால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி போன்றோர் அடக்கம்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் டைமிங்.. ரைமிங்.. ஒரு ஷாக் பேட்டி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் டைமிங்.. ரைமிங்.. ஒரு ஷாக் பேட்டி

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

இது எல்லாவற்றிற்கும் மேலாக சொந்த தொகுதி என்பதாலும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் என்பதாலும், போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜியை தோற்கடிக்க கூடுதல் பொறுப்புடன், கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அதனால் தேர்தல் பணி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

நன்னியூர் கிராமம்

நன்னியூர் கிராமம்

இந்நிலையில், வாங்கல் பகுதி நன்னியூர் கிராமத்திற்கு விஜயபாஸ்கர் நிர்வாகிகளுடன் சென்றிருந்தார். அங்கிருந்த ஒரு டீக்கடைக்குள் நுழைந்தார். அது ஒன்றும் பெரிய அளவிலான கடை கிடையாது. கிராமத்தில் இருக்கிற ஒரு சாதாரண டீக்கடைதான்.

திண்ணை

திண்ணை

அங்கு பெஞ்ச்சுகூட இல்லை.. டீக்கடை வெளியே திண்ணை இருந்தது. அந்த திண்ணையில்தான் கிராமத்தை சேர்ந்த சிலர் டீ குடித்து கொண்டிருந்தனர். விஜயபாஸ்கரும் திண்ணையில் உட்கார்ந்தார். அவருடன் நிர்வாகிகளும் உட்கார்ந்து கொண்டனர். எல்லாருக்கும் டீ சொல்லப்பட்டது.

கிராம மக்கள்

கிராம மக்கள்

அதுவரை டீக்கடையில் இருந்த நியூஸ் பேப்பரை எடுத்து படிக்க ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்தில சூடான டீ கண்ணாடி டம்ளரில் வந்தது. ஒரு கையில் நியூஸ் பேப்பர்.. ஒரு கையில் டீ டம்ளருடன் விஜயபாஸ்கர் உட்கார்ந்திருந்ததை ஊர் மக்கள் பார்த்து கொண்டே சென்றனர். இப்படி எந்த பந்தாவும் இல்லாமல் அடிக்கடி விஜயபாஸ்கர் இந்த டீக்கடையில் உட்கார்ந்து டீகுடித்துவிட்டு போவார் என்று கிராம மக்கள் பெருமையாக சொல்கிறார்கள்.

English summary
Transport Minister MR Vijayabaskar drank tea in Nanniyur Village
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X