கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக அரசு சட்டத்தால் நிறைவேறிய ஐஸ் வியாபாரி மகனின் எம்பிபிஎஸ் கனவு.. முழு செலவையும் ஏற்ற அமைச்சர்!

Google Oneindia Tamil News

கரூர்: ஐஸ் வியாபாரம் செய்யும் கூலித் தொழிலாளியின் மகனின் மருத்துவ படிப்பிற்கான கல்லூரிக்கட்டணம் முழுவதையும் போக்குவரத்து துறை அமைச்சர் .எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்றுக் கொண்டார்.

கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் பஞ்சமாதேவி அஞ்சல் அரசு காலனியில் வசிக்கும் சுப்பிரமணி என்பவர் ஐஸ் வியாபாரம் செய்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறார்.

Minister MR Vijayabaskar accepted full tuition fee for the medical studies of the son of an ice trader

அவரின் மகன் செல்வன்.மாரிமுத்து, வாங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பில் 933 மதிப்பெண்கள் பெற்றார். நீட் தேர்வில் 297 மதிப்பெண்கள் பெற்றார்.

ஏழை எளிய மாணவர்களின் மருத்துவப்படிப்பிற்கான கனவை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுப்பள்ளி மாணவ - மாணவிகளுக்கு இளநிலை மருத்துவப் பிரிவுகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் இடம் கொடுக்கப்படும் என்று சட்டம் கொண்டு வந்தார். இதன் பயனாக ஐஸ் வியாபாரம் செய்யும் கூலித் தொழிலாளியின் மகனுக்கு கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவப்படிப்பிற்கான இடம் கிடைத்தது.

குடும்பத்தின் வறுமை காரணமாக கல்லூரியில் சேர்வதற்கான கட்டணம் கூட கட்ட முடியாத நிலையில் இருந்த மாணவன் குறித்து அறிந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் .எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாணவனையும் அவரது பெற்றோரையும் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து, அந்த மாணவனுக்கான மருத்துவப்படிப்பு முடிக்கும் வரை அவரது கல்லூரிக்கட்டணம் முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

சிறிய சந்து பொந்து கிடைத்தாலும் இந்தியைத் திணிக்கும் மத்திய அரசு... மு.க.ஸ்டாலின் சாடல்சிறிய சந்து பொந்து கிடைத்தாலும் இந்தியைத் திணிக்கும் மத்திய அரசு... மு.க.ஸ்டாலின் சாடல்

மேலும், முதலாம் ஆண்டிற்கான கட்டணமாக ரூ.20,000 ரொக்கத்தை மாணவரிடம் இன்று கரூரில் வழங்கினார். எதிர்பாராத இந்த உதவியால் நெகிழ்ந்துபோன மாணவர் மற்றும் அவரது பெற்றோர் இடஒதுக்கீடு அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், கல்லூரிக் கட்டணத்தை செலுத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் உருக்கத்துடன் நன்றி தெரிவத்தார்.

English summary
Transport Minister MR Vijayabaskar has accepted the full tuition fee for the medical studies of the son of an ice trader after get 7.5 reservation quata.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X