2 முறை கேட்டேன்... அந்த நம்பரை மட்டும் என்கிட்ட சீமான் சொல்லவே இல்லையே... அமைச்சர் செந்தில் பாலாஜி
கரூர்: மின்வெட்டு புகார் தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவர் வீட்டு மின் இணைப்பு எண்ணை கேட்டும் தரவே இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கரூரில் சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:
தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை எதுவும் இல்லை. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 6 நாட்களுக்கும் மேலான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. நிலக்கரி பற்றாக்குறை தற்போது தமிழகத்தில் எதுவும் இல்லை. அடுத்த இரண்டு நாட்களில் 4.80 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தமிழகத்தில் மின் உற்பத்தி 4,320 மெகாவாட்டாக இருக்கிறது. இது 5 ஆண்டுகளுக்குள் கூடுதலாக 6,220 மெகாவாட் அதிகரிக்கப்படும். தமிழகத்தில் மின்விநியோகம் சீராகவே உள்ளது. தமிழகத்தின் மின் உற்பத்தியை பிற மாநிலங்களுக்கு உபரியாக நாம் கொடுக்கும் நிலையில் இருக்கிறோம். மின்நுகர்வோரிடம் இருந்து சுமார் 8 லட்சம் புகார்களை நாங்கள் பெற்றிருக்கிறோம். இப்புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேட்டூர் அணையில் இருந்து 24-ந் தேதி நீர் திறந்துவிடப்படும். அதன்பின்னர் மேட்டூரில் மின் உற்பத்தி தொடங்கப்படும். காற்றாலைகளில் இருந்து கிடைக்கும் மின்சாரமும் தற்போது அதிகரித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் சீமான் தமது வீட்டில் மின் தடை ஏற்பட்டிருந்தது என்றார். அப்போது ட்விட்டரில் நான் அவரது வீட்டு மின் இணைப்பு எண்ணை கொடுங்கள் என கேட்டேன். அந்த எண்ணை 2 முறை கேட்டுப் பார்த்தேன். ஆனால் சீமான் வீட்டு மின் இணைப்பு எண்ணை தருவதாக இல்லை.
உங்களுக்குதான் கண்ணீரே இல்லை..எங்கிட்டு ரத்த கண்ணீர் வருது? கே.எஸ்.அழகிரி மீது சீமான் சரமாரி அட்டாக்