கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூஞ்சியை பாருங்க.. உங்களுக்காக உழைச்சு கருத்து போச்சு.. அதுக்காச்சும் ஓட்டுபோடுங்க.. விஜயபாஸ்கர் பலே

Google Oneindia Tamil News

கரூர்: உங்களுக்காகவே உழைச்சு.. உழைச்சு.. கருத்து போன என் முகத்தை பார்த்தாவது ஓட்டுப் போடுங்க" என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தம்பிதுரைக்காக வாக்கு சேகரித்தார்.

வேட்பாளர் பெயரை அறிவிப்பதற்கு முன்பும் சரி, பின்பும் சரி.. தம்பிதுரை மீது கரூர் தொகுதி மக்கள் செம கடுப்பில் உள்ளனர்!

ஏற்கனவே 2 முறை ஜெயிச்சும், தொகுதிக்கு அவர் எதுவுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் தம்பிதுரை எங்கு சென்றாலும் அங்கு காலி குடத்தை வைத்து கொண்டு ஊர் மக்கள் நடுரோட்டில் உட்கார்ந்து விடுகிறார்கள்.

அண்ணே.. பாத்துண்ணே.. குழந்தை வெளியே விழுந்துற போகுது.. தூங்கிய குழந்தையை பாடி எழுப்பிய மன்சூர்!அண்ணே.. பாத்துண்ணே.. குழந்தை வெளியே விழுந்துற போகுது.. தூங்கிய குழந்தையை பாடி எழுப்பிய மன்சூர்!

சமாளிப்பு

சமாளிப்பு

சில இடங்களில் நேருக்கு நேராகவே தம்பிதுரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முடிந்தவரை தம்பிதுரை சமாளித்து பேசுகிறார். ஒருகட்டத்தில் காரசார விவாதம் நடக்கும்போது, "இஷ்டம் இருந்தா ஓட்டு போடுங்க.. இல்லாட்டி போங்க.. உங்க கால்ல எல்லாம் இதுக்குன்னு விழ முடியாது" என்று பேசிவிட்டு நகர்கிறார்.

பிரச்சாரம்

பிரச்சாரம்

ஆனாலும் நிறைய இடங்களுக்கு தம்பிதுரை சென்று ஓட்டு கேட்க வேண்டியுள்ளது. அதிருப்திகள் கூடிவருவதாலோ என்னவோ, பிரச்சாரத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வந்திருந்தார். தம்பிதுரைக்காக வாக்கு சேகரித்தார்.

தூங்காத கண்கள்

தூங்காத கண்கள்

அப்போது விஜயபாஸ்கர், "என் கடுமையான உழைப்பை பார்த்து... உங்களுக்காகவே உழைச்சு உழைச்சு கருத்த என் முகத்தை பார்த்து... தூங்காத என் கண்களை பார்த்து... யாரையும் இதுவரை குறையே சொல்லாத என்னை பார்த்து... எனக்காக அதிமுகவுக்கு வாக்களியுங்கள்" என்றார் சிரித்தபடியே.

தொகுதி மக்கள்

தொகுதி மக்கள்

ஆனால் "இப்படியெல்லாம் சொன்னா மட்டும் தம்பிதுரை மேல இருக்கிற அதிருப்தி போயிடுமா என்ன" என்று தொகுதி மக்களின் மைன்ட் வாய்ஸ்தான் அங்கே நிறைய கேட்க முடிந்தது!

English summary
Health Minister Vijayabaskar campaigned for M Thambidurai in Karur Constitution
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X