கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடி ஆட்சியை கவிழ்ப்பது எப்படி?.. அரவக்குறிச்சியில் கணக்கு போட்டு காண்பித்த ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

Recommended Video

    அரவக்குறிச்சியில் கணக்கு போட்டு காண்பித்த ஸ்டாலின்- வீடியோ

    அரவக்குறிச்சி: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது எப்படி என்பது குறித்து அரவக்குறிச்சியில் கணக்கு போட்டு காண்பித்தார் ஸ்டாலின்.

    அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில் தமிழகத்தில் 23 -ஆம் தேதி வாக்குகள் எண்ணும் போது எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு போவது உறுதி செய்யப்படும்.

    ஐந்தாண்டு கால ஆட்சிக்குப் பிறகு மோடி வீட்டுக்குப் போவது என்பது இயற்கையாக அமைந்துள்ளது. தமிழகத்தில் இன்னும் ஒன்றேமுக்கால் ஆண்டு ஆட்சி இருக்கிறது.

    கரூரில் ஜோதிமணிக்குத்தானே வாக்களித்தீர்கள்.. தப்பிதவறி வேறு யாருக்கும் வாக்களிக்கலையே? ஸ்டாலின் கலகல கரூரில் ஜோதிமணிக்குத்தானே வாக்களித்தீர்கள்.. தப்பிதவறி வேறு யாருக்கும் வாக்களிக்கலையே? ஸ்டாலின் கலகல

    மைனாரிட்டி

    மைனாரிட்டி

    பின் எப்படி வீட்டுக்கு போக முடியும் என்று ஒரு கேள்வி எழலாம்.

    எடப்பாடி தலைமையில் நடைபெறும் இந்த ஆட்சி மெஜாரிட்டி இல்லாத நிலையில் மைனாரிட்டியாக நடைபெறும் ஆட்சி தான்.

    22 தொகுதிகளில்

    22 தொகுதிகளில்

    நாடாளுமன்ற தேர்தலில் நூற்றுக்கு நூறு எப்படி வெற்றி பெறுகிறோமோ அதே போல் நடந்து முடிந்த 18 சட்டமன்ற இடைத் தேர்தலிலும் இனி நடைபெற இருக்கிற 4 சட்டமன்றத் தேர்தலிலும் ஆக மொத்தம் 22 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும்.

    திமுக ஆட்சி அமையும்

    திமுக ஆட்சி அமையும்

    ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் 97 பேர் இருக்கிறோம். தற்போது வெற்றி பெறும் 22 பேரோடு 119 பேர் வந்துவிடும். இதனால் 23ம் தேதிக்குப் பிறகு நாம் தான் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அமையும்.

    கருணாநிதியின் மகன் நான்

    கருணாநிதியின் மகன் நான்

    இது ஆளும் கட்சிக்கு நன்றாக தெரியும். அதனால்தான் அதற்கு ஒரு சூழ்ச்சி செய்தார்கள். 3 எம்பி எம்எல்ஏக்கள் பதவியை திடீரென்று பறிக்க விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்கள். இந்த சூழ்ச்சியை கருணாநிதியின் மகன் நான் அறிந்து கொண்டேன்.

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    எனவே சபாநாயகர் மீது எம்எல்ஏக்களாக இருக்கும் நாங்கள் நம்பிக்கை இழந்து இருக்கிறோம். அதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை உங்கள் மீது கொண்டு வருகிறோம் என்று ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தேன்.

    சூழ்ச்சி

    சூழ்ச்சி

    அதனால் அவர்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுக்க முடியாது. நீக்குவதற்காக கடிதம் அனுப்பப்பட்ட எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றம் சென்று முறையிட்டு அதன் வாயிலாக சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என தடை போட்டுள்ளது உச்சநீதிமன்றம்.ஆகவே அவர்கள் போட்ட சூழ்ச்சிக்கு நான் ஒரு ஆப்பு வைத்தேன் என்றார் ஸ்டாலின்.

    English summary
    MK Stalin explains how DMK will come to power after counting of votes on May 23.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X