கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் திருடும் குடும்பத்தில் பிறக்கவில்லை.. அவர்தான் சாராயம் காய்ச்சி விற்றவர்: அமைச்சர் காச்மூச்!

Google Oneindia Tamil News

கரூர்: தான் ஒன்றும் திருடும் குடும்பத்தில் பிறக்கவில்லை என அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று மாலை வெளியாகின. இந்த கருத்துக்கணிப்பு அதிமுகவுக்கு பாதகமாகவே அமைந்துள்ளது.

மத்தியில் பாஜக கூட்டணிதான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என அனைத்து கருத்துக்கணிப்புகளும் தெரிவித்துள்ளன. ஆனால் தமிழகத்தை பொருத்தவரை பாஜக கூட்டணி வைத்துள்ள அதிமுக பெரும் பின்னடைவை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit polls: மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட காங்கிரஸ்.. மற்ற கட்சிகளையும் கெடுத்துவிட்டதுதான் மிச்சம் Exit polls: மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட காங்கிரஸ்.. மற்ற கட்சிகளையும் கெடுத்துவிட்டதுதான் மிச்சம்

கவலையில்லை

கவலையில்லை

கருத்துக்கணிப்புகள் அதிமுக தலைவர்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கரூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, கருத்துக் கணிப்புகள் பற்றி கவலையில்லை. மக்களும் அதிமுக தொண்டர்களும் எங்களோடு இருக்கிறார்கள்.

வெற்றி உறுதி

வெற்றி உறுதி

அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. இன்று திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு வாக்களிக்க 2 ஆயிரம் டோக்கன், ஸ்டார் பதித்த நம்பர் டோக்கன் விநியோகித்த திமுகவை சேர்ந்த ஜெகநாதனை காவல்துறை பிடித்துள்ளனர்.

நானும் பேசுவேன்

நானும் பேசுவேன்


என்னை மின்சாரம் திருடியதாக திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி சொல்கிறார். நாளை அதற்கு விளக்கம் தருகிறேன்.

தேவையில்லாததை பேசினால் நானும் நிறைய பேசவேண்டி இருக்கும்.

திருடும் குடும்பம் இல்லை

திருடும் குடும்பம் இல்லை

நான் திருடற குடும்பத்தில் பிறக்க வில்லை.

செந்தில் பாலாஜி தான் கள்ளசாராயம் காய்ச்சி விற்பனை செய்தவர்.

திமுக 2 ஆயிரம் ரூபாய் கொடுத்தது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளோம்.

மக்கள் இருக்கிறார்கள்

மக்கள் இருக்கிறார்கள்

கருத்துக்கணிப்பு பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

கடந்த முறை மூன்று இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கருத்துக் கணிப்பு கூறியபோதும் 37 இடங்களில் வெற்றி பெற்றோம்.

அதிமுக தொண்டர்களும், மக்களும் எங்களுடன் இருக்கின்றனர். இவ்வாறு தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியளித்தார்.

English summary
Minsiter MR Vijayabaskar condemns Senthil Balaji. Minister says Senthil balaji was selling illicit liquor. My family is not theft family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X