கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புயல் வந்தாலும் சரி, பூகம்பம் வந்தாலும் சரி.. அதிமுகவை அசைக்க முடியாது.. ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு

Google Oneindia Tamil News

கரூர்: புயல் வந்தாலும் பூகம்பம் வந்தாலும் இந்த இயக்கத்தை ஆட்டவோ அசைக்கவோ முடியாது அரவக்குறிச்சி பிரச்சாரத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசினார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 19 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் செந்தில்நாதனை ஆதரித்து, அ.தி.மு.க கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பி.எஸ் இரண்டாவது கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார்.

கரூரை அடுத்த புகளூர் நான்குரோடு, நொய்யல் குறுக்குச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆங்காங்கே பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்.

பாஜகவினரை ஏக காண்டாக்கிய சு.சுவாமியின் குசும்பு ட்வீட்.. ஜோக்கடிச்சுட்டோம்னு நினைப்பு பாஜகவினரை ஏக காண்டாக்கிய சு.சுவாமியின் குசும்பு ட்வீட்.. ஜோக்கடிச்சுட்டோம்னு நினைப்பு

தகராறு

தகராறு

மு.க.ஸ்டாலின் முதல்வராகி விட முடியுமா ? அவரது தந்தையால் கூட முடியவில்லை.

மு.க.ஸ்டாலின் முதல்வராகி விட முடியுமா ? அவரது தந்தையால் கூட முடியவில்லை. தற்போது தி.மு.க. கட்சி, எதிர்க்கட்சி. ஆகவே இந்நிலையிலும், வன்முறையில் தான் தி.மு.க. கட்சி திகழ்கிறது. பிரியாணி கடையில் அடிதடி தகராறு, புரோட்டா கடையில் தகராறு, அப்பாவி பெண்கள் ப்யூட்டி பார்லர் வைத்திருந்தால் அங்கே சென்று மாமூல் கேட்டு தகராறு செய்கின்றனர்.

பொதுமக்கள்

பொதுமக்கள்

எதிர்க்கட்சியிலேயே இந்த நிலைமை என்றால்? என்ன ஆகும் என்றார். பின்னர் தொடர்ந்து, இதே தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை பற்றி நான் கூற தேவையில்லை. ஏனென்றால் சென்ற முறை வந்த போது, ஏதோ, அமாவாசை என்று பொதுமக்கள் கூறினார்கள்.

ஆட்டவோ

ஆட்டவோ

அப்போது தான், அமைதிப்படை, படத்தில் சத்யராஜ், அமாவாசை கதாபாத்திரத்தில் நடித்தார். அதே போல தான், தற்போது செந்தில்பாலாஜி இருக்கிறார்.
அதிமுக இயக்கத்தை பூகம்பமோ சுனாமியோ வந்தாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது.

தொண்டர்கள்

தொண்டர்கள்


அதிமுகவை அழிக்க திமுக தலைவர் மு க ஸ்டாலினின் தந்தையால் முடியாமல் போனது. தற்போது ஸ்டாலினும் முயற்சிக்கிறார். அவர் தந்தையால் முடியாதது எவராலும் முடியாது.

ஏனெனில் இந்த இயக்கம் தொண்டர்களால் தாங்கி பிடிக்க கூடிய இயக்கமாக இருக்கிறது.

வேட்பாளர்

வேட்பாளர்

அதிமுகவை தொட்டுப் பார்க்கக் கூட முடியாது.

மேலும் அந்த வேட்பாளர் பல்வேறு கட்சிகளில் இருந்து சென்று தற்போது தி.மு.க விற்கு சென்றுள்ளார். எப்படி உடனடியாக மாவட்ட செயலாளர் ஆனார் என்பது தான் தெரியவில்லை. உலகளவில் ஏதாவது கூட்டத்திற்கு வாருங்கள் என்று பணம் கொடுத்து வரும் நிலையில், நமது கூட்டத்திற்கு வரக்கூடாது என்று பணம் கொடுக்கும் ஒரே வேட்பாளர் செந்தில்பாலாஜி தான்.

பொதுமக்கள்

பொதுமக்கள்

அவரிடம் எவ்வளவு பணம் உள்ளது, அவ்வளவு பணம் எப்படி வந்தது. ஆகவே, இந்த முறை மக்கள் கொடுக்கும் அதிரடி முடிவினால் இனிமேல், அரசியலில் செந்தில் பாலாஜிக்கு அடிமேல் அடி விழும்.

அரசியலில் இது பாடமாக செந்தில் பாலாஜிக்கு அமையும் அளவிற்கு பொதுமக்கள் டெபாசிட் இழக்கும் வகையில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

English summary
Deputy CM O.Paneerselvam says that no one shake our ADMK, as it is being stand on true cadres.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X