கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கள்ளக்காதலுக்கு இடையூறு.. 3 ஆண்டுக்கு முன் கணவரை தீர்த்து கட்டிய மனைவி.. துப்பு துலக்கி 5 பேர் கைது

Google Oneindia Tamil News

கரூர்: கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். 3 ஆண்டுகள் கழித்து போலீஸார் அதிரடியாக துப்பு துலக்கி கைது செய்தனர்.

கரூரை அடுத்த பசுபதிபாளையம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட காந்திகிராமம் அருகே உள்ள வடக்குபாளையம் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி அன்று தலைப் பகுதியில் வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது.

இதனை அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்து அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், சட்டசபைத் தேர்தல் வந்ததை அடுத்து குற்ற வழக்கு தொடர்பாக காவல்துறையினர் நாமக்கல், திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் கொலையான நபரின் புகைப்படத்தை ஒட்டி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம்

இந்நிலையில் கொலை தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தொலைபேசி மூலம் பசுபதிபாளையம் காவல்துறையினர் தகவல் கிடைத்தை அடுத்து திருப்பூர் சென்று விசாரணை மேற்கொண்டதில் கொலையான நபர் சுப்புராஜ் என்பது தெரிய வந்ததது. இவரது மனைவியிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

குளிர்பான கடை

குளிர்பான கடை

அதில் சுப்புராஜ் குடும்பதுடன் திருப்பூரில் குளிர்பான கடை ஒன்றினை நடத்தி வந்துள்ளார். அப்போது அந்த கடைக்கு அடிக்கடி வந்த கரூர் தொழிற்பேட்டையைச் சேர்ந்த கனகராஜ் என்பவருக்கும் சுப்புராஜ் மனைவி அன்னலட்சுமிக்கும் இடையே கள்ளகாதல் ஏற்பட்டு உள்ளது.

கொலையாளிகள்

கொலையாளிகள்

கள்ளகாதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை கொலை செய்ய திட்டம் தீட்டிய அன்னலட்சுமி, கனகராஜுடன் சேர்ந்து கரூர் வடக்குபாளையம் பகுதியில் கொலை செய்து சடலத்தை அங்கே விட்டு சென்றனர். காவல்துறையினரின் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கொலை குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.

நீதிமன்றக் காவல்

நீதிமன்றக் காவல்

இதையடுத்து சுமார் 3 வருடங்களுக்கு பின்னர் கொலை குற்றவாளிகள் கனகராஜ், பிரகாஷ், சந்தோஷ், சுப்புராஜ் மனைவி அன்னலட்சுமி, அன்னலெட்சுமியின் தாயார் ஜெயலலிதா உட்பட 5 பேரை பசுபதிபாளையம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

English summary
Illegal Relationship: police arrested Cooldrinks shop owner's wife, her mother, her paramour in a murder case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X