கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுவரைக்கும் என்ன செஞ்சீங்க.. இந்தா இதை குடிச்சு பாரு.. தம்பிதுரையிடம் கோபாவேசம் காட்டிய மக்கள்!

Google Oneindia Tamil News

கரூர்: "இப்போ என்னத்துக்கு ஓட்டு கேட்டு ஊருக்குள் நீ வர... இதுவரைக்கும் எங்களுக்கு நீ என்ன செஞ்சிருக்கே? குடிக்கிற தண்ணி எவ்ளோ மோசமா இருக்கு தெரியுமா? இந்தா இதை குடிச்சு பாரு" என்று ஓட்டு கேட்க போன தம்பிதுரையிடம் பொதுமக்கள் கலங்கலான தண்ணீர் பாட்டிலை தந்ததுடன் ஓட ஓடவும் விரட்டி அடித்துள்ளனர்!

அதிமுக சார்பில் கரூரில் தம்பிதுரை போட்டியிடுகிறார். ஆனால் ஏற்கனவே இதே தொகுதியில் 2 முறை போட்டியிட்டு வென்ற தம்பிதுரை, தொகுதிக்கு எதையுமே செய்யவில்லை என்று பேசப்பட்டது. இதற்காக பலமுறை தொகுதியில் அவர் விரட்டி அடிக்கப்பட்டுள்ளார்.

இப்போது பிரச்சாரம் சமயம் என்பதால் வேறு வழியில்லாமல், தொகுதி மக்களிடம் ஓட்டு கேட்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் செல்லும் இடமெல்லாம் விரட்டியடிக்கப்படுவது அனேகமாக தம்பிதுரையாகத்தான் இருக்கும்!

என்னால மாடு பிடிக்க முடியாது.. அதனால அப்படி என்னை சொல்லாதீங்கப்பா.. ஓபிஎஸ் கலகல பேச்சு! என்னால மாடு பிடிக்க முடியாது.. அதனால அப்படி என்னை சொல்லாதீங்கப்பா.. ஓபிஎஸ் கலகல பேச்சு!

காலி குடங்கள்

காலி குடங்கள்

மீண்டும் ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது! வேடசந்தூர் அருகே உள்ள லந்தக் கோட்டையில் ஓட்டு கேட்க ஊருக்குள் சென்றார் தம்பிதுரை! அவரை பார்த்ததும் பெண்கள் எல்லாம் வீட்டுக்குள் இருந்து காலி குடங்களை எடுத்து கொண்டு வந்து நடுரோட்டில் நின்று கொண்டு ஊருக்குள் வரக்கூடாது என்று தம்பிதுரைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

"எதுக்கு ஊருக்குள்ள வர்றீங்க.. குடிக்க தண்ணி இல்லைன்னு எத்தனை வருஷமா சொல்லிட்டு இருக்கோம். மனுகூட தந்தோம்.. ஏதாச்சும் கண்டுக்கிட்டீங்களா? கலங்கலான தண்ணியைதான் குடிச்சிட்டு வர்றோம்" என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வீடியோ

வீடியோ

இதனை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுக்கவும் பதறிபோன தம்பிதுரை, "எதுக்கு வீடியோ எடுக்கிறே?" என்று அலறினார். அதற்கு பெண்கள், "அப்படித்தான் வீடியோ எடுப்போம். என்னத்துக்கு ஓட்டு கேட்டு ஊருக்குள்ள வர்ற" என்று கேட்டு திரும்பவும் கேள்வி எழுப்பினர்.

கலங்கல் நீர்

கலங்கல் நீர்

அத்துடன் கலங்கலான தண்ணீரை ஒரு பாட்டிலில் பிடித்து "இந்தா இதை குடி.. அப்போ தெரியும்" என்று தம்பிதுரையிடம் குடிக்க தந்தார்கள். இதையெல்லாம் பார்த்து டென்ஷன் ஆன தம்பிதுரையோ அந்த இடத்தை சட்டுபுட்டுனு காலி செய்து கிளம்பி விட்டாராம்!

English summary
Lantha Kottai village people oppose ADMK candidate M Thambidurai Dont ask Vote in Karur Constitution
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X