கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரவக்குறிச்சி தொகுதி மநீம வேட்பாளர் அலுவலகத்தில் திடீர் ரெய்டு... பறக்கும் படையினர் அதிரடி

Google Oneindia Tamil News

கரூர்: அரவக்குறிச்சி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

சில தினங்களுக்கு முன்பு, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் மோகன்ராஜை ஆதரித்து, பள்ளப்பட்டியில், பிரச்சாரம் மேற்கொண்ட, கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றார்.

Raid at aravakurichiConstituency MNM Party Candidate Mohanrajs Office

இந்த பேச்சு, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் கமல்ஹாசனின் பிரச்சார கூட்டத்தில் காலணி வீசப்பட்டது. இதுதொடர்பாக பாஜகவைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இரு தினங்களுக்கு முன்பு, வேலாயுதம்பாளையம் பகுதியில் அரவக்குறிச்சி தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை முடித்துவிட்டு செல்லும் போது முட்டை மற்றும் கல்வீசப்பட்டது.

7 வது மற்றும் கடைசி கட்ட மக்களவைத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இத்துடன் தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை பிடிப்பது யார் என்று மே 23ஆம் தேதி தெரிந்துவிடும்

இந்து மதம் பற்றிய வரலாறு தெரியாமல் பேசுகிறார் கமல்ஹாசன்... இல.கணேசன் காட்டம் இந்து மதம் பற்றிய வரலாறு தெரியாமல் பேசுகிறார் கமல்ஹாசன்... இல.கணேசன் காட்டம்

இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜின் கரூர் அலுவலகத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மோகன்ராஜ் பணப்பட்டுவாடா செய்வதாக கிடைத்த புகாரை தொடர்ந்து பறக்கும் படை அலுவலர் மனோகரன் தலைமையில் சோதனை நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Election Flying Squad Raid at aravakurichi Constituency MNM Party Candidate Mohanraj's Office
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X