கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடேங்கப்பா.. நினைத்ததற்கு மேலாக செயல்படுகிறார்.. யாரை பாராட்டுகிறார் எஸ்.வி.சேகர் பாருங்க!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் எஸ்.வி. சேகர் பாராட்டு தெரிவித்தார்.

Google Oneindia Tamil News

கரூர்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறாரா என்று நினைத்தோம்.. ஆனால் நினைச்சதுக்கு மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் நடிகர் எஸ்.வி.சேகர் பாராட்டியுள்ளார்.

ஏற்கனவே காங்கிரஸ், அதிமுக, கட்சிகளில் இருந்துவிட்டு தற்போது பாஜகவில் உள்ளார். பிரதமர் மோடிக்கு நெருக்கமாவும் இருக்கிறார்.

அடிக்கடி தமிழக பாஜக தலைமை மாறும்போதெல்லாம், இவரது எஸ்.வி.சேகர் பெயர்தான் அடிபட்டு போகிறது.

அவதூறு கேஸ்

அவதூறு கேஸ்

இந்த நிலையில் கரூரில் செய்தியாளர்களிடம் எஸ்.வி. சேகர் பேசினார். அப்போது அவர் சொன்னதாவது: "பெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசியதாக என் மீது கேஸ் போடப்பட்டது.

ஷேர் செய்தேன்

ஷேர் செய்தேன்

ஆனால் அது என் கருத்து இல்லை. எனக்கு ஒருவர் பேஸ்புக்கில் அனுப்பியதைதான் நான் ஷேர் செய்தேன். ஆனாலும் இந்த பிரச்சனை காரணமாக என் மீது 7, 8 வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதையெல்லாம் ஒரே இடத்தில் நடத்தி முடிக்க வக்கீல்களிடம் பேசி வருகிறேன்.

தென்சென்னை

தென்சென்னை

திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்தியது நியாயம்தான். எம்பி தேர்தலுடன் 20 தொகுதிகளுக்கும் தேர்தல் வர வாய்ப்பு இருக்கிறது. அப்போது பாஜக தலைமை விரும்பினால் தென்சென்னை தொகுதியில் நான் போட்டியிடுவேன்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசை பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமி என்னதான் செய்யப்போகிறார் என்று நாமெல்லாம் நினைத்தோம். ஆனால் நாம நினைச்சதுக்கும் மேலாகவே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து 2014-ம் ஆண்டு தொடர்ந்து வெற்றி பெற்று பாரத பிரதமராக மோடி நீடிப்பார்.

தனி நாடா?

தனி நாடா?

மத்திய அரசின் நிழலாக தமிழக அரசு செயல்படுகிறது என்று சொல்வதெல்லாம் உண்மை இல்லை. அதுக்கான அவசியமும் இல்லை. தமிழ்நாடு என்று பெயர் வைத்தால் தனி நாடாகி விடுமா? மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால்தான் மாநில அரசுக்கு தேவையான நல்லது கிடைக்கும்" என்றார்.

English summary
Actor S.ve. Sekhar appreciates about TN CM Edapadi Palanisamy Activies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X