கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குஷ்பு இட்லி, ஓவியா இட்லின்னு பேர் வெச்சாதான் சாப்பிட தோணுது.. சிவப்பா இருந்தா மோகம்.. சீமான் வேதனை

மக்களை பாதிக்கும் மத்திய அரசின் திட்டங்களை சரமாரியாக சாடினார் சீமான்

Google Oneindia Tamil News

Recommended Video

    Seeman Campaign | சிவப்பா இருந்தா மோகம்: பிரச்சாரத்தில் சீமான் வேதனை- வீடியோ

    அரவக்குறிச்சி: "8 வருஷமா கத்திட்டே இருக்கேன். இவனான்னு என்னை பார்த்து கேட்கிறாங்க. இட்லி நம்ம இட்லிதான். ஆனா, குஷ்பு இட்லி, ஓவியா இட்லின்னு பேர் வெச்சாதானே சாப்பிட தோணுது. சிவப்பா இருந்தா ஒரு மோகம்" என்று சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து, தென்னிலை, மற்றும் வேலாயுதம்பாளையம் பகுதியில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சீமான் பேசியதாவது:

    ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் 274-இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. ஒரு முதலாளி வாழ மொத்தநாட்டு மக்களையும் பலி வாங்க முடிவு பண்ணிட்டாங்க.

    கஞ்சி-விவசாயி

    கஞ்சி-விவசாயி

    இன்னைக்கு திரும்பவும் விடுதலை புலிகள் அமைப்பின் மீது தடைன்னு சொல்றாங்க. இது தேசிய இனத்தின் மீது சுமத்தப்படுகின்ற பெருத்த அவமானம். 4ஜி தொழில்நுட்பத்தில் தற்போது செல்போன் பயன்பாடு உள்ளது. எத்தனை "ஜி" தொழில்நுட்பம் வந்தாலும் கஞ்"சி" விவசாயி தான் ஊத்தணும்.

    ‘கலைஞருக்கு‘ 6அடி இடம் கூட கொடுக்காதவர்கள்.. தமிழக அரசு மீது ஸ்டாலின் சரமாரி குற்றச்சாட்டு!‘கலைஞருக்கு‘ 6அடி இடம் கூட கொடுக்காதவர்கள்.. தமிழக அரசு மீது ஸ்டாலின் சரமாரி குற்றச்சாட்டு!

    கத்திட்டு இருக்கேன்

    கத்திட்டு இருக்கேன்

    என் சொந்த நாடே அடிமைப்பட்டு கிடக்கிறது. எனக்கு நீ என்ன வெச்சிருக்கிறே? 8 ஆண்டுகளாக கத்திட்டு வரேன். குடிக்க தண்ணி இல்லை, குடிக்க நீரில்லாம வெறும் குடத்தோடு சாகுவோம், இவங்களுக்கு தண்ணி குடுக்க துப்பு இல்லை, கெடுத்துடுவாங்கன்னு, நாட்டை சுடுகாடு ஆக்கிட்டு இருக்காங்கன்னு கதறினேன். ஆனா என் பேச்சை நீங்க யாருமே கேட்கல. ஏன்? ஓ..இவனான்னு என்னை பார்த்து கேட்கிறாங்க. இட்லி நம்ம இட்லிதான். ஆனா, குஷ்பு இட்லி, ஓவியா இட்லின்னு பேர் வெச்சாதான் சாப்பிட தோணுது. சிவப்பா இருந்தா ஒரு மோகம்.

    தலைசிறந்த தத்துவம்

    தலைசிறந்த தத்துவம்

    "திட்டமிட தவறுகிறபோது, திட்டமிட தவறுகிறோம்" இது நான் படிச்சது. பெஸ்ட் ஃபிலாஸபி. உலகத்தின் சிறந்த தத்துவம். நீ பூமி தாயை நல்லா வெச்சுக்கிட்டா, அது உன்னை நல்லா வெச்சுக்கும். ஹைட்ரோ கார்பன் எடுக்கறேன்னு நீ நோண்டினா, உன் ஈரக்குலை காலியாயிடும். நீ மீத்தேன்னு எடுக்கறன்னு சொன்னா, நீ சாகுறது தவிர வேற வழி இல்லை. எல்லாத்தையும் இப்படியே குடுத்து முடிச்சிட்டீங்க.

    ஓட்டுக்கு காசு

    ஓட்டுக்கு காசு

    கடைசியா 5 ஆண்டு மட்டும் எனக்கு குடுத்து பாருங்க. இந்த மாதிரி குத்து பாட்டு, டான்ஸ் போட்டுக்கிட்டு ஒரு கூட்டமும் இங்க இருக்காது. ஆகசிறந்த தேசமாக, உலகத்தின் தலைசிறந்த நாடாக, ஆக வேண்டும் என்று கனவுடன் நின்றுகொண்டிருக்கிறோம். உங்களுக்கு ஓட்டுக்கு காசு தர எங்களால முடியாது, ஆனா உயர்ந்த வாழ்க்கையை தர என்னால முடியும். நாங்க காசாளர்கள் இல்லை, ஆக சிறந்த கருத்தாளர்கள்!

    உங்கள் விருப்பம்

    உங்கள் விருப்பம்

    கோடிகளை கொட்டி இந்த தேர்தலை சந்திக்கல, உயர்ந்த கொள்கைகளை முன்னிறுத்தி நிற்கிறோம். வாக்கை கேட்கல, என் எதிர்கால மக்களின் வாழ்க்கையை கேட்கிறோம். தருவதும், தராததும் உங்கள் விருப்பம். இது என் தோல்வி இல்லை, என் மக்களின் தோல்வி. இது என் வெற்றி அல்ல, என் மக்களின் வெற்றி!" என்றார்.

    English summary
    In Aravakurichi Campaign, Seeman has criticized BJP government and its Policies
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X