கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பன்றி மேய்க்க நான் தயாராக இல்லை.. அதனால்தான் அதிமுகவிலிருந்து விலகினேன்.. செந்தில் பாலாஜி பொளேர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Senthil Balaji: முதல்வர் துணைமுதல்வர் குறித்து செந்தில் பாலாஜி கருத்து- வீடியோ

    கரூர்: அடிமைக் கூடாரத்தில் இருந்து கொண்டு பன்றி மேய்ப்பதற்கு தான் தயாராக இல்லை என்றும் அதனால் தான் அதிமுகவை விட்டு வந்ததாகவும் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் திமுக சார்பில் செந்தில் பாலாஜியும், அதிமுக சார்பில் செந்தில் நாதனும் போட்டியிடுகின்றனர்.

    நேற்று காலை செந்தில் பாலாஜி க.பரமத்தி பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். மாலையில் அவர் அரவக்குறிச்சி ஒன்றிய பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக தேர்தல் அதிகாரிகளிடமும், போலீசாரிடமும் ஏற்கனவே அனுமதி வாங்கியிருந்தாராம்.

    சினிமாவுல மார்க்கெட் போயாச்சி.. அதான் கமல் அரசியலுக்கு வந்துட்டாரு.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜிசினிமாவுல மார்க்கெட் போயாச்சி.. அதான் கமல் அரசியலுக்கு வந்துட்டாரு.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

     செந்தில் பாலாஜி புகார்

    செந்தில் பாலாஜி புகார்

    இந்நிலையில் முதல்வர் பழனிச்சாமி நேற்று அரவக்குறிச்சியில் பிரசாரம் மேற்கொண்டதால் தன்னை அந்த பகுதியில் பிரச்சாரம் செய்யக்கூடாது என போலீசார் தடை விதித்ததாக செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார்.

    போலீஸ் மீது புகார்

    போலீஸ் மீது புகார்

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, முதல்வர் பிரச்சாரம் செய்ய செல்லும் இடம் வேறு, நான் செல்லும் இடம் வேறு. போலீசும், தேர்தல் ஆணையமும் ஆளும் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது..

    ஒபிஎஸ் மீது விமர்சனம்

    ஒபிஎஸ் மீது விமர்சனம்

    என்னை துரோகி என அமைச்சர்கள் தொடர்நது பேசிவருகிறார்கள். சசிகலாவின் காலில் விழுநது முதல்வராகிவிட்டு அவரையே தெரியாது என கூறியவர் முதல்வர் பழனிச்சாமி. தர்மயுத்தம் நடத்தி ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சசாமி அரசு ஊழல் அரசு என்றும் விமர்சித்தவர் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம். அதன் பின்னர் பதவிக்காக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.

    பன்றிமேய்க்க

    பன்றிமேய்க்க

    நான் அப்படி நிலையை மாற்றிக்கொள்பன் அல்ல. அடிமைக் கூடாரத்தில் இருந்து கொண்டு பன்றி மேய்ப்பதற்கு நான் தயாராக இல்லை. இவர்களது அடிமைத்தனம் பிடிக்காமல் தான் அங்கிருந்து நான் வந்துவிட்டேன்" இவ்வாறு கூறினார்.

    English summary
    tn by elections 2019: aravakuruchi dmk candidate senthil balaji attacks aiadmk party and TN CM EPS and DY CM OPS
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X