தம்பிதுரைக்கு ஒரு கைத்தடி இருக்கார்.. குட்டைபையான்னு சொல்லுவோம்.. விஜயபாஸ்கரை வாரிய செந்தில் பாலாஜி
Recommended Video
கரூர்: தம்பிதுரைக்கு இங்க ஒரு கைத்தடி.. ஒரு பையன் இருக்கான். மந்திரியா இல்லாதப்போ பாதி நேரம் என் ரூம்லதான் வந்து உட்கார்ந்திருப்பார். பொதுவாக நாங்க அவரை என்ன சொல்லுவோம்னா.. குட்ட பையான்னு சொல்லுவோம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை கிண்டலடித்துப் பேசினார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
கரூர் தொகுதி லோக்சபா காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து திமுகவில் சமீபத்தில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சரும், அமமுக முக்கியப் பிரமுகருமான செந்தில் பாலாஜி பிரச்சாரம் செய்தார். அப்போது தம்பிதுரை மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கரை ரொம்பவே நக்கல் விட்டுக் கலாய்த்தார்.
செந்தில் பாலாஜி பேசுகையில், "சிவாஜி கணேசன் இறந்ததுக்கு காரணமே இந்த விஜயபாஸ்கர்தான். அவ்வளவு பெரிய நடிகன். சுருக்கமா போலீஸ்காரங்க பாஷையில சொல்லணும்னா 420-ன்னு சொல்லணும்.
ஓட்டு மையை காமிங்க.. சிக்கன் கிலோவுக்கு ரூ. 50 தள்ளுபடியை அள்ளிக்கிட்டு போங்க.. சென்னையில் அதிரடி
டோக்கன்
2016-ல் நடந்த எலக்ஷனில் ஒரே ராத்திரியில எல்லாருக்கும் டோக்கன் அடிச்சு தந்தார். ஆனா அந்த டோக்கனுக்கு ஒரு சேலை கொடுத்தாரா. ஒரு பொருள் கொடுத்தாரா? யாராச்சும் இங்க வாங்கினாங்களா? (இல்லை.. இல்லை.. என்று கோஷம்) தேர்தல்ல ஜெயிச்சு மந்திரியாகி, காலேஜ், ஆஸ்பத்திரின்னு போயிட்டார்.
காலேஜ் கட்டறார்
நேத்துதான் என்கிட்ட அதிகாரிகள் சொன்னாங்க, விஜயபாஸ்கர் வாங்கிற சொத்து ஒரு நாளைக்கு 200 ஏக்கர் பதிவாகுதாம். இவரும் காலேஜ் கட்டறார், தம்பிதுரையும் ஓசூர்ல மருத்துவ கல்லூரி கட்டறார்.
45 காலேஜ்
தம்பிதுரைக்கு 45 காலேஜ் இருக்கு. ஆனால் யாராவது வசதியில்லாதவர்களுக்கு அந்தக் கல்லூரி ஒன்றில் இடம் கொடுத்து படிக்க விட்டிருப்பாரா. இனி ஊரு பக்கம் தம்பிதுரை எட்டிப் பார்க்கக்கூடாது. அப்படி நீங்க அவரை விரட்டியடிக்கணும்.
போன் நம்பர் தெரியுமா?
தம்பிதுரை போன் நம்பர் இந்த தொகுதியில யாருக்காவது தெரியுமா? இங்க இருக்கிற பத்திரிகைகாரங்களுக்கு தெரியுமா அவர் போன் நம்பர்?" என்று ஏராளமான கேள்விகளை கேட்டு வாக்கு சேகரித்தார்.