கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னது 50,000 வித்தியாசமா.. முதல்ல 50 ஆயிரம் ஓட்டு வாங்கட்டும் பார்ப்போம்.. செந்தில் பாலாஜி பொளேர்

அமைச்சர் செங்கோட்டையனுக்கு செந்தில் பாலாஜி காரசார பதிலடி தந்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜியை சமாளிக்க திட்டம் போடும் அதிமுக

    கரூர்: "என்னது.. 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசமா.. முதல்ல அவங்க 50 ஆயிரம் ஓட்டு வாங்கட்டும்.. அதுவே அவங்களுக்கு பெரிசு.. சாதனை" என்று அதிமுகவை கடுமையாக சாடி தெறிக்க விட்டுள்ளார் செந்தில் பாலாஜி!

    4 தொகுதி இடைத்தேர்தலில் எல்லாரது கவனமும் அரவக்குறிச்சி மீது விழுந்துள்ளது. இதற்கு செந்தில்பாலாஜி என்ற திமுகவின் வலிமையான வேட்பாளர்தான்!

    அதனால்தான் இவரை அதிமுக, அமமுக சார்பாக யாரும் பெரிய அளவில் விமர்சிக்காமல் உள்ளனர். ஒருவேளை விமர்சித்தால், அவர்களுக்கு பதிலடி தரவும் செந்தில் பாலாஜி தயாராகவே இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இப்போது தொகுதிக்குள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் செந்தில் பாலாஜி.

    3 பேரை தகுதி நீக்கம் செய்தாலும் நீதிமன்றம் செல்லமாட்டோம்.. தேர்தலை சந்திப்போம்.. அமமுக 3 பேரை தகுதி நீக்கம் செய்தாலும் நீதிமன்றம் செல்லமாட்டோம்.. தேர்தலை சந்திப்போம்.. அமமுக

    செங்கோட்டையன்

    செங்கோட்டையன்

    இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "புலனாய்வு அமைப்பு எங்கள் கையில் இருக்கிறது" என்ற ஒரு விஷயத்தை சொல்லி இருந்தார். இது சம்பந்தமாக குரும்பப்பட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது செந்தில்பாலாஜியிடம் கருத்து கேட்கப்பட்டது.

    புலனாய்வுத்துறை

    புலனாய்வுத்துறை

    அதற்கு அவர் பதிலளித்தபோது, "ஒரு மூத்த அமைச்சராக இருந்தும் புலனாய்வு அமைப்பு எங்கள் கையில் இருக்கிறது என்று அவர் ஒரு கருத்து தெரிவித்துள்ளார். இதெல்லாம் அவரது இயலாமையைத்தான் காட்டுகிறது. இப்படி ஒரு புலனாய்வுத்துறை தான் ஆர்கேநகர் தேர்தலின்போதும் அறிக்கை அளித்து இருப்பார்கள். அது என்ன ஆச்சு?

    அரசு அதிகாரிகள்

    அரசு அதிகாரிகள்

    தமிழ்நாட்டில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்துவிட்டால், அது தொடர்பான அறிக்கையை அரசுக்கு அனுப்புவதுதான் புலனாய்வுத் துறையின் வேலை. ஆனா அவங்களை இப்படி தேர்தலுக்காக அவர்கள் பயன்படுத்தலாமா? இந்த ஆட்சியில் அரசு அதிகாரிகள் நிர்பந்தத்தின் பேரில் பணியாற்றி வருகிறார்கள்.

    ஒப்புக் கொண்டனர்

    ஒப்புக் கொண்டனர்

    தமிழக முதலமைச்சரும் ,மோடி அரசும் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பது இதன்மூலம் அவங்களே ஒப்புக் கொண்டுவிட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது.

    ரா.. அமைப்பு

    ரா.. அமைப்பு

    எத்தனை புலனாய்வு துறையை அவங்க வெச்சுக்கட்டுமே.. ஆனால் எங்க திமுக நிர்வாகிகள் இருக்கிறார்களே.. அவர்கள் எல்லோரும் மத்திய புலனாய்வு அமைப்பான ரா விற்கு இணையானவர்கள்.

    அதுவே சாதனை

    அதுவே சாதனை

    50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பதாக செங்கோட்டையன் சொல்கிறார். ஆனா அவர்கள் 50 ஆயிரம் வாக்குகள் வாங்கினாலே பெரிசு. அதுவே அவர்களுக்கு சாதனை" என்றார்.

    English summary
    Aravakurichi DMK Candidate Senthil Balaji Slams Minister Sengottaian and criticized TN Gov
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X