கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதற்கு பெயர் தேர்தலா? வாக்கு எண்ணும் மையத்திலேயே அமர்ந்து தர்ணா.. செந்தில் பாலாஜி, ஜோதிமணி அதிரடி!

கரூரில் வாக்கு எண்ணுவதிலும், முடிவுகளை அறிவிப்பதில் முறைகேடு நடப்பதாக கூறி கரூரில் வாக்கு எண்ணும் மையத்தில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, காங். எம்பி ஜோதிமணி தர்ணா போராட்டம் செய்து வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

கரூர்: கரூரில் வாக்கு எண்ணுவதிலும், முடிவுகளை அறிவிப்பதில் முறைகேடு நடப்பதாக கூறி கரூரில் வாக்கு எண்ணும் மையத்தில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, காங். எம்பி ஜோதிமணி தர்ணா போராட்டம் செய்து வருகிறார்கள்.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் வேகமாக வெளியாகி வருகிறது. 24 மணி நேரத்தை கடந்து வாக்கு எண்ணும் பணி நடந்து வருகிறது. இதுவரை மொத்தம் 7 மாவட்டங்களில் மொத்தமாக வாக்கு எண்ணும் பணி நிறைவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள பகுதிகளில் வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக கரூரில் க.பரமத்தியில் செந்தில் பாலாஜி, ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 ஊரக உள்ளாட்சி தேர்தல்.. திமுக மாபெரும் முன்னிலை.. வேகமாக தொடரும் அதிமுக.. நிலவரம் என்ன? ஊரக உள்ளாட்சி தேர்தல்.. திமுக மாபெரும் முன்னிலை.. வேகமாக தொடரும் அதிமுக.. நிலவரம் என்ன?

என்ன செய்தனர்

என்ன செய்தனர்

பரமத்தியில் 16 வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் காங். வேட்பாளருக்கு பதிலாக அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றதற்காக அறிவிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அங்கு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக இவர்கள் இருவரும் புகார் வைத்துள்ளனர்.

பிரச்சனையா

பிரச்சனையா

இதற்கு எதிராக புகார் தெரிவித்து செந்தில் பாலாஜி, ஜோதிமணி இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் லோகநாயகி வெற்றி பெற்றதை அறிவிக்கவில்லை, மீண்டும் வாக்குகளையே எண்ண வேண்டும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணும் மையத்தில் எம்எல்ஏ செந்தில் பாலாஜி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஆகிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜோதிமணி தற்போது டிவிட்டும் செய்துள்ளார். அதில், கரூர் மாவட்டம் க. பரமத்தி ஒன்றியம் 1.அஞ்சூர்- திமுக 2 கூடலூர் மேற்கு காங்கிரஸ் வெற்றிபெற்று இடங்களை பல மணி நேரமாக அறிவிக்காமல் நிறுத்திவைத்தனர்.

2 முறை தேர்தல் ஆணையர் உடன் சந்திப்பு.. மிட் நைட் மீட்டிங்.. திமுகவினருக்கு ஸ்டாலின் தந்த எச்சரிக்கை!2 முறை தேர்தல் ஆணையர் உடன் சந்திப்பு.. மிட் நைட் மீட்டிங்.. திமுகவினருக்கு ஸ்டாலின் தந்த எச்சரிக்கை!

காவல்துறை

ஆனால் இரவோடு இரவாக காவல்துறை குவிக்கப்பட்டு, அதிமுக வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பெயர் தேர்தலா? மக்கள் தேர்வுக்கு மதிப்பில்லையா?, என்றுள்ளார். அவரின் இந்த புகார் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Tamilnadu Local body elections: Jothimani and Senthil Balaji did Dharna in Karur during counting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X