கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெட்டு மச்சான்.. வீச்சரிவாளால் கேக் வெட்டிய மணிகண்டன்.. மொத்த கும்பலையும் அள்ளியது கரூர் போலீஸ்

அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய கரூர் ரவுடிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி -வீடியோ

    கரூர்: வெட்டுடா மச்சான்.. என்று நண்பர்கள் சொல்ல... அரிவாளால் கேக் வெட்டி ஹேப்பி பேர்த்டே கொண்டாடினாரே மணிகண்டன்.. அவரைதான் எதிர்பார்த்தபடியே போலீஸ் குண்டுகட்டாக அள்ளி கொண்டு போய்விட்டது

    ஒரு காலத்தில் ரொம்பவும் பயங்கரமான ஆயுதங்கள் என்று நாம் நினைத்து பயந்த அரிவாள், பட்டாக்கத்தி எல்லாம் இன்றைய இளம் ரவுடிகளிடம் அசால்டாக புழங்கி வருகிறது. இவர்கள் எல்லாம் தாங்கள் ரவுடிகள் என்பதையே ஒரு போஸ்டிங்காக வைத்து கொண்டிருக்கிறார்கள்.

    இதில் வருஷந்தோறும் பிறந்த நாளையும் சக ரவுடிகளுடனே கொண்டாடவும் ஆரம்பித்து விட்டார்கள். அதுவும் நடுரோட்டில் கொண்டாடினால்தான் இவர்களுக்கு சிறப்பு. கையில் அரிவாளை கொண்டு கேக்கை வெட்டினால் இன்னும் சென்ட்டிமென்ட்!

    செய்தியாளர்கள் மீதான ஆதங்கத்தால் எந்த ஜாதி என கேட்ட கிருஷ்ணசாமி.. வக்காலத்து வாங்கும் அன்புமணிசெய்தியாளர்கள் மீதான ஆதங்கத்தால் எந்த ஜாதி என கேட்ட கிருஷ்ணசாமி.. வக்காலத்து வாங்கும் அன்புமணி

    ரவுடி பினு

    ரவுடி பினு

    இந்த கலாச்சாரம் சென்னையில்தான் ஆரம்பமானது. ரவுடி பினுதான் இந்த பழக்கத்தை ஆரம்பித்து வைத்தார். அவரை தூக்கி ஜெயிலில் போட்டு, களி திண்ண வைத்தும், மற்ற ரவுடிகள் இன்னும் திருந்தாமல்தான் உள்ளனர்.

    நடுராத்திரி, நடுரோட்டில்..

    நடுராத்திரி, நடுரோட்டில்..

    இப்படித்தான், நேற்று முன்தினம், கரூர் அருகே சணப்பிரட்டி செல்லும் ரோட்டில் தொழிற்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே ஒரு ரவுடியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. ரவுடியின் பெயர் மணிகண்டன். நடுராத்திரி, நள்ளிரவு, நடுரோட்டில் டேபிள் போடப்பட்டு, மெழுகுவர்த்தியும் ஏற்றப்பட்டது.

    வெட்டு மச்சான்

    வெட்டு மச்சான்

    மணிகண்டன் மெழுகுவர்த்திகளை ஊத... "வெட்டு மச்சான்.. கேக் வெட்டுடா" என்று சக ரவுடிகள் கைகளை தட்டி சொல்கிறார்கள். மணிகண்டனும் நீளமான அரிவாளால் கேக்கை வெட்டினார். இதை உடன் இருந்த இன்னொரு ரவுடி வீடியோ எடுத்தார்.

    3 பேர் கைது

    3 பேர் கைது

    ரவுடிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடும் தகவல் போலீசின் காதுகளுக்கு எட்டியது. கொண்டாட்டம் முடிவதற்குள் சம்பவ இடத்துக்கு சென்றுவிட்டனர் போலீசார். ஆனால் இவர்களை பார்த்ததும், ரவுடிகள் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தனர். ஆனாலும் போலீசார் விரட்டி பிடித்து 3 பேரை ரவுண்டு கட்டி கைது செய்தனர். மற்றவர்கள் தப்பி விட்டனர்.

    வலைவீச்சு

    வலைவீச்சு

    கைதான 3 பேரில் ஹேப்பி பேர்த்டே பேபி மணிகண்டனும் ஒருவர். மணிகண்டனுக்கு 24-வது பிறந்த நாள் இது. மற்ற இருவரது பெயர் அசோக் ஆனந்த் 31, கார்த்திக் 28, என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், தப்பி ஓடிய மற்ற ரவுடிகளையும் தேடி வருகிறார்கள்.

    English summary
    Three Young People arrested for sickle birthday celebration in Karur
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X