கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பலே பலே.. ரூ.20 டோக்கன் போய் இப்போ ரூ.2.000 ஜெராக்ஸ் டோக்கன்.! செந்தில் பாலாஜி மீது புகார்

Google Oneindia Tamil News

அரவக்குறிச்சி: தோல்வி பயத்தால் அரவக்குறிச்சியில் வாக்கு சதவீதத்தை குறைக்கும் முயற்சியில், திமுக ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தோற்று விடுவோம் என்ற அச்சத்தில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி பல தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Aravakurichi

இதில் ஒரு பகுதியாக அரவக்குறிச்சியில் ரூ.2,000 நோட்டை ஜெராக்ஸ் எடுத்து, டோக்கனாக கொடுத்து வாக்காளர்களுக்கு திமுக விநியோகித்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

அ.ம.மு.க.,வில் செந்தில்பாலாஜி இருந்த போது ஆர்.கே.,நகர் தேர்தலுக்காக ரூ.20 நோட்டை டோக்கனாக கொடுத்து பழகியவர் செந்தில் பாலாஜி. இப்போது இந்த டெக்னிக்கை அரவக்குறிச்சியிலும் செயல்படுத்தியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

திமுக ஒன்றிய பொருளாளர் ஜெகநாதன் என்பவரின் மூலம், ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து வாக்காளர்களுக்கு டோக்கனாக தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மாலை 3 மணிக்கு மேல் கலர் ஜெராக்ஸ் டோக்கனுக்கு பணம் தருவதாகவும், தேர்தல் முடிந்த பிறகு பணம் தருவதாகவும் பல இடங்களில் கூறி வாக்காளர்களை ஓட்டு போட விடாமல் தடுத்து வைத்துள்ளனர்.

கம்பு ஊன்றி பாப்பம்பட்டிக்கு வந்த 103 வயது மூதாட்டி துளசியம்மாள்.. ஜனநாயக கடமையாற்றிய உணர்வு! கம்பு ஊன்றி பாப்பம்பட்டிக்கு வந்த 103 வயது மூதாட்டி துளசியம்மாள்.. ஜனநாயக கடமையாற்றிய உணர்வு!

இன்னும் சில இடங்களில் வாக்காளர்களை மிரட்டி மாலையில் ஓட்டு போடுங்கள் பணம் தருகிறோம் என்று கூறி திமுக அராஜகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சாடினார். இப்படி கூறியே புகளூர் நால்ரோடு, காந்திநகர் மற்றும் முல்லை நகர் உள்ளிட்ட இடங்களில், வாக்காளர்களை இதுவரை ஓட்டுப்போட விடாமல் தடுத்து வைத்துள்ளனர்.

தோல்வி பயத்தால் மக்களை திசை திரும்பும் செயலில் திமுக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் அராஜகத்தில் ஈடுபடும் திமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் வலியுறுத்தினார்

English summary
Transport Minister vijayabaskar has alleged that the DMK has been involved in the attempt to reduce the vote percentage of the vote.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X