கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections 2019: வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்: செந்தில்பாலாஜி ஆவேசம்- வீடியோ

    கரூர்: திட்டமிட்டு அ.தி.மு.க.வினர் வன்முறையை தூண்டிவிட்டனர் என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

    மக்களவைத் தேர்தலையொட்டி கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, கரூர் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார்.

    Violence provoked by AIADMK Says Ex Minister senthilBalaji

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மாபெரும் வெற்றி பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதே நிலைதான் தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளிலும் காணப்படுவதாகவும் கூறினார்.

    தமிழகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை.. கோடை வெயிலில் இருந்து தப்பித்த மகிழ்ச்சியில் மக்கள் தமிழகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை.. கோடை வெயிலில் இருந்து தப்பித்த மகிழ்ச்சியில் மக்கள்

    இந்த தேர்தலோடு மத்தியில் ஆளும் மோடியும், தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியும் வீட்டுக்கு செல்வது உறுதி என்றார். ராகுல்காந்தி பிரதமர் ஆவார். மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆவார் எனவும் தெரிவித்தார்.ஏதோ முதியோர் உதவித்தொகை கேட்டு மனு கொடுத்தது போல, எங்களது புகார் மனுவை சாதாரணமாக கையாண்டு இருக்கிறார், கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அன்பழகன் என்றும் விமர்சனம் செய்தார்.

    இதற்கிடையே, ஆளுங்கட்சி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தூண்டுதலின் பேரில், தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, காங்கிரஸ் வேட்பாளரான என் மீதும் பொய் புகார் அளித்து, அதன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை சட்டப்படி சந்திப்போம் என்று ஜோதிமணி கூறியுள்ளார்.

    English summary
    Ex Minister SenthilBalaji said that Violence provoked by AIADMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X