கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெயலலிதா மறைவுக்கு பின் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டதா... மு.க. ஸ்டாலின் கேள்வி

Google Oneindia Tamil News

அரவக்குறிச்சி: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டதா என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி கேட்டுள்ளார்.

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், ஜெயலலிதா மரணத்துக்கு காரணமாக இருந்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவுக்கே என்ஆதரவு .. எடப்பாடியை சந்தோஷப்படுத்திய பிரபுவின் பதில்நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவுக்கே என்ஆதரவு .. எடப்பாடியை சந்தோஷப்படுத்திய பிரபுவின் பதில்

விடைகொடுங்கள்

விடைகொடுங்கள்

மேலும், ஜெயலலிதா மறைவுக்கு பின் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினார். ஆட்சியில் இருந்து பழனிசாமிக்கு விடைகொடுங்கள் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டத்துக்கு முறையாக சம்பளம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த அவர், அரவக்குறிச்சி - நங்காஞ்சி ஆற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

சிந்தனையே இல்லை

சிந்தனையே இல்லை

ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை தவிர அதிமுகவினருக்கு வேறு சிந்தனையே இல்லை என விமர்சனம் செய்த ஸ்டாலின், மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தை வஞ்சிக்கின்றன என்றும் குற்றம்சாட்டினார்.

6 முறை சம்மன்

6 முறை சம்மன்

6 முறை சம்மன் அனுப்பியும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை என்றும் தேர்தல் அதிகாரிகளில் சிலர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது எனவும் ஸ்டாலின் பேசினார்.

ஸ்டாலின் பதில்

ஸ்டாலின் பதில்

எந்த கொம்பாதி கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு பதிலடியாக, அதிமுக அரசை அகற்ற மக்கள் தயாராகி விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
MKStalin question that Was the mourning meeting held after the death of Jayalalitha?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X