கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பழைய கேஸை கிளறிய சென்னை போலீஸ்.. எம்எல்ஏ செந்தில் பாலாஜியின் வீட்டில் ரெய்டு ஏன்? பரபரக்கும் கரூர்

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸார் விசாரணை.. வீட்டில் குவிந்த ஆதரவாளர்கள் - வீடியோ

    கரூர்: திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜியின் வீட்டில் சென்னை போலீஸ் ரெய்டு நடத்தியதற்கு காரணம் அவர் மீதான பழைய வழக்குகள் என சொல்லப்படுகிறது. இதற்காக மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் சென்னை போலீஸார் சிறப்பு அனுமதி பெற்றனர்.

    ஜெயலலிதா 2011-ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்த போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. திமுகவிலிருந்து விலகி சென்றாலும் செந்தில் பாலாஜியின் செல்வாக்கு, உழைப்பை கருத்தில் கொண்டு அவருக்கு பல்வேறு பதவிகளை கொடுத்து அழகு பார்த்தார்.

    பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகள் காரணமாக 2015 இல் அவர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் 2016-இல் மரணமடைந்த போது தினகரன் அணியில் செயல்பட்டார்.

    திமுக செந்தில் பாலாஜி வீட்டில் சென்னை போலீஸார் ரெய்டு.. வீட்டில் குவிந்த ஆதரவாளர்கள் திமுக செந்தில் பாலாஜி வீட்டில் சென்னை போலீஸார் ரெய்டு.. வீட்டில் குவிந்த ஆதரவாளர்கள்

    அமமுக

    அமமுக

    இதையடுத்து தகுதி நீக்கத்தில் அவரது எம்எல்ஏ பதவி பறி போனது. எனினும் தினகரன் தொடங்கிய அமமுகவில் இணைந்து முக்கிய பதவி வகித்து வந்தார் செந்தில் பாலாஜி. இந்த நிலையில் தினகரனுடன் ஏற்பட்ட கருத்து மோதல், செலவீனங்களால் செந்தில் பாலாஜி அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

    அரவக்குறிச்சி

    அரவக்குறிச்சி

    இதையடுத்து அவருக்கு கரூர் மாவட்ட பொறுப்பாளர் என்ற முக்கிய பொறுப்பை கொடுத்தார் ஸ்டாலின். பின்னர் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து அரவக்குறிச்சி எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் வீட்டில் இல்லாத நிலையில் கரூரில் உள்ள அவரது வீட்டில் சென்னை போலீஸார் ரெய்டு நடத்தினர்.

    போக்குவரத்துத் துறை அமைச்சர்

    போக்குவரத்துத் துறை அமைச்சர்

    அவரது அலுவலகம் மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் வீடுகளிலும் திடீர் ரைடு நடத்தப்பட்டது. போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக 16 பேரிடம் ரூ.95 லட்சம் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது புகார் நிலுவையில் இருந்தது. இந்த மோசடியை அவர் போக்குவரத்து துறை அமைச்சராக 2011-2015-ஆம் ஆண்டு காலகட்டத்தில் செய்ததாக கூறப்படுகிறது.

    விசாரணை

    விசாரணை

    மோசடி குறித்து அம்பத்தூர் கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் மட்டுமல்லாது திருவண்ணாமலையில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    English summary
    Why Senthil Balaji's house raided by Chennai Police? They got permission from Metropolitan Court where the case proceedings going on.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X