• search
கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

நடுங்க வைக்கும் நரபலி?.. 10 வயசுதான்.. உடம்பெல்லாம் நெருப்பு.. வழியும் ரத்தம்.. மொட்டை தலை.. ஷாக்!

|

கிருஷ்ணகிரி: 10 வயசு சிறுவனை மிக கொடூரமான முறையில் கொன்றுள்ளனர்... ஒருவேளை துடிதுடிக்க கொன்றிருப்பதை பார்த்தால், சிறுவனை நரபலி தந்திருப்பார்களோ என்ற சந்தேகம் கிருஷ்ணகிரி போலீசாருக்கு எழுந்துள்ளது.

பர்கூர் அடுத்த கொட்லேட்டி கிராமத்தில் இருந்து உச்சன்கொல்லை செல்லும் வழியில் மல்லேஸ்வரன் என்ற பகுதி உள்ளது.. இது ஒரு மலைப்பகுதி..!

இந்த மலையை சுற்றி நிறைய கிராமங்கள் உள்ளன.. இங்குள்ள மக்கள் அந்த மலைஅடிவாரத்திற்கு விறகு சேகரிப்பதற்காக அடிக்கடி செல்வது வழக்கம்.

 சடலம்

சடலம்

அப்படித்தான், நேற்று முன்தினம் அந்த பகுதி மக்கள் சென்றுள்ளனர்.. அங்கே 10 வயது சிறுவன் சடலமாக கிடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. எனவே போலீசாருக்கு தகவல் சொல்லவும் அவர்கள் விரைந்து வந்து சடலத்தை மீட்டனர்.. அப்போதுதான் அந்த கொடுமையை சிறுவனின் சடலத்தில் பார்த்தனர்.

மொட்டை

மொட்டை

அவன் உடம்பெல்லாம் பிரம்பால் அடித்ததற்கான தடயங்கள் காணப்பட்டன.. ரத்த காயங்கள் ஆங்காங்கே சிவந்து கிடந்தன.. தலை முழுவதுமாக மொட்டையடிக்கப்பட்டிருந்தது.. அவன் வாயில் மிளகாய் பொடியை திணிக்கப்பட்டிருந்தது.. அவனது மார்பு, கை, கால்கள், என உடம்பின் மொத்த இடமும் நெருப்பால் சுடப்பட்டுள்ளது.. நெருப்பாலேயே அவனை பொசுக்கி கொன்றார்களா என்ற சந்தேகம் எழுந்தது. .

 வழக்கு விசாரணை

வழக்கு விசாரணை

ஆனால் சிறுவன் அந்த பகுதியை சேர்ந்தவன் இல்லை என்பதால், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை ஆரம்பித்தனர்.. சுற்றுவட்டார பகுதிகளையும் தாண்டி, 10 வயதில் யாராவது காணாமல் போய் உள்ளனரா என்று விசாரித்தனர்.. ஆனால், 2 நாளாக இந்த கொலையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.. எனவே, யாராவது தொழிலதிபர் வீட்டுப்பிள்ளையை பணத்துக்காக கடத்தி சித்ரவதை செய்து இப்படி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அடுத்த சந்தேகம் போலீசாருக்கு கிளம்பி உள்ளது

 நரபலி

நரபலி

அதுமட்டுமல்ல, சிறுவனுக்கு அப்போதுதான் மொட்டை அடித்துள்ளது தெரியவந்தது.. அதனால், நரபலி கொடுக்கவே இப்படி முயற்சி செய்திருக்கமோ என்ற கோணத்திலும் சந்தேகிக்கப்படுகிறது.. இப்போதைக்கு 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.

குற்றவாளிகள்

குற்றவாளிகள்

இவர்களில் ஒரு குழுவினர் ஆந்திரா மாநில எல்லையிலும், மற்றொரு குழுவினர் திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்... இதைதவிர சிறுவனின் போட்டோவை எல்லா ஸ்டேஷனுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.. அநேகமாக சிறுவனை பாரத்தால் ஆந்திராவை சேர்ந்தவன் போல தெரிகிறானாம்.. எப்படியும் ஓரிரு நாளில் குற்றவாளிகளை கைது செய்துவிடுவோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

நரபலி

நரபலி

ஏற்கனவே ஆந்திராவில் இப்படித்தான், பெற்ற பிள்ளைகளை நரபலி கொடுத்த அதிர்ச்சியே இன்னும் விலகவில்லை.. இப்போது இன்னொரு நரபலி என்பது உறுதியானால், இது சம்பந்தமாக ஏதாவது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்.. படித்த முட்டாள்கள், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசைக்காரர்கள், மூடத்தனத்தில் ஊறிப்போனவர்களுக்கு எல்லாம், ஒன்றுமறியாத பச்சை குழந்தைகளை அநியாயத்துக்கு பலி கொடுக்க முடியாது.. அதற்கு அனுமதிக்கவும் கூடாது.. ஏதாவது செய்தே ஆக வேண்டும்!!

English summary
10 year old boy brutally murder case investigation by Krishnagiri Police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X