Just In
கிருஷ்ணகிரி அருகே.. பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 60 பேர் காயம்.. 5 பேர் கவலைக்கிடம்
கிருஷ்ணகிரி: அஞ்செட்டி அருகே திருமணத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து 60 பேர் காயமடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த அஞ்செட்டி பெரும்பாலும் வனப்பகுதிகளை கொண்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரி பகுதியிலிருந்து திருமண நிகழ்ச்சிக்காக பேருந்து ஒன்றில் 60க்கும் மேற்பட்டோர் கிளம்பி சென்றனர்.

அஞ்செட்டி அடுத்த திருமணம் என்ற வளைவில் பேருந்து திரும்பும் போது எதிர்பாராத விதமாக பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பேருந்தில் இருந்த 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 பேர் கவலைக்கிடமாக உள்ள நிலையில் தர்மபுரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.