20 வயசுதான் சோனியாவுக்கு.. 65 வயது துணிக்கடை உரிமையாளருடன் ஓட்டம்.. கலங்கி கிடக்கும் கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி: வேலைக்கு சென்ற 20 வயது இளம் பெண் 65 வயது துணிக்கடைக்காரருடன் மாயமான சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தங்கள் மகளை துணிக்கடைக்காரர் கடத்தி சென்றுவிட்டதாக அவரது பெற்றோர் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
மாயமாகும் முன் சோனியா தனது பெற்றோரை அழைத்து கடையின் உரிமையாளரான பர்கூரை சேர்ந்த செல்வத்துடன் இருப்பதாக கூறிவிட்டு துண்டித்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வினையாக மாறி ஸ்மார்ட்போன்.. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் ஷாக்

மாயமான சோனியா
கிருஷ்ணகிரி அருகே உள்ள மேல்பட்டி தர்மராஜா நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் சோனியா (20) . இவர் கிருஷ்ணகிரி நகரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 14-ம் தேதி வேலைக்கு சென்ற சோனியா பின்னர் வீடு திரும்பவில்லை.

துணிக்கடைக்காரருடன் மாயம்
இந்நிலையில் செல்போனில் பெற்றோரை தொடர்புகொண்ட சோனியா, தான் கடையின் உரிமையாளரான பர்கூரை சேர்ந்த செல்வத்துடன் இருப்பதாக கூறிவிட்டு, செல்பேசி
இணைப்பை துண்டித்து விட்டார். இதை கேடடு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

எஸ்பியிடம் மனு
அதன்பின்னர் பெற்றோர் மற்றும் மற்றும் உறவினர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கடை உரிமையாளர் பர்கூர் செல்வம் தங்களது மகளை மீட்டுத்தருமாறு கோரி மனு அளித்தனர்.

பல பெண்களை சீரழித்தவர்
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடையின் உரிமையாளரான பர்கூரை சேர்ந்த 65 வயதுடைய செல்வம் என்பவர் ஏற்கனவே பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளதாகவும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார்கள் உள்ளது. இப்போது கடத்திச் சென்றுள்ள தங்களது மகளை மீட்டுத் தருமாறும், செல்வத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.