கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிருஷ்ணகிரியில் 3ம் வகுப்பு மாணவனை அடித்த ஆசிரியை.. காதில் ரத்தம் சொட்ட சொட்ட வந்த கொடுமை!

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: தனியார் பள்ளி ஆசிரியர் அடித்ததில் மாணவர் காதில் ரத்தம் வழிந்தும் பெற்றோர் வரும் வரை பள்ளி நிர்வாகம் முதலுதவி செய்யவில்லை என சிறுவனின் தந்தை ஆதங்கப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் பிரதீப் என்கின்ற மாணவன் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்று உள்ளான். பள்ளியில் ஆங்கில ஆசிரியர் ஸ்வேதா மாணவனை ஆங்கில புத்தகத்தின் மீது போட்டிருக்கும் அட்டை ஏன் கிழிந்து உள்ளது என கேட்டிருக்கிறார்.

Also Read | இடைத் தேர்தலிலும் நிற்கிறோம்.. 18 தொகுதியிலும் போட்டியிடுகிறோம்.. மக்கள் நீதி மய்யம் அதிரடி

உடல்நிலை சரியில்லை

உடல்நிலை சரியில்லை

மாணவன் தெரியாமல் கிழிந்து விட்டது என்று பதில் கூறி உள்ளார். இதனால் ஆசிரியர் மாணவனை தாக்கியதாக கூறபடுகிறது. தாக்கியதில் மாணவனின் காதில் ரத்தம் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அந்த ஆசிரியர், மாணவனுக்கு உடல் நிலை சரியில்லை என பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார்.

சிகிச்சை

சிகிச்சை

அதனால் தந்தை சுரேந்திரன் விரைந்து சென்று ஆசிரியரை கேட்டிருக்கிறார். அதற்கு ஆசிரியர் என்னவென்று தெரியவில்லை மாணவனின் காதில் இருந்து ரத்தம் வருகிறது என மட்டும் கூறியுள்ளார் உடனடியாக மாணவனின் தகப்பனார் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை பார்த்து வந்தனர்.

பலமாக அடி

பலமாக அடி

சிகிச்சை பார்த்த மருத்துவர் காதில் சவ்வுப் பகுதியில் ஏதாவது அடிபட்டிருக்கலாம் என மருத்துவர் கூறியுள்ளார். உடனே மாணவனை விசாரித்தபோது மாணவரை ஆங்கில ஆசிரியர் ஸ்வேதா தாக்கினார் என மாணவர் கூறினார்.

பள்ளி நிர்வாகம் அலட்சியம்

பள்ளி நிர்வாகம் அலட்சியம்

இதை அறிந்த பெற்றோர் பள்ளி தாளாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அதற்கு அவர் தான் மருத்துவரிடம் பேசிவிட்டால் உங்கள் வேலையை பாருங்கள் என கூறிவிட்டார். அதன் பின்பு பள்ளியில் இருந்து ஆசிரியர், ஓட்டுநர் என 7 பேர் மருத்துவமனைக்கு வந்து சமரச முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

English summary
A school teacher attacks students for not properly cover his notebook near Krishnagir. The boy has bleeding in his ear.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X