கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒசூர் ஆஞ்சினம்மாவிற்கும், குஜராத் சோனுக்கும் "தொடர்பு.." அப்புறம்தான் அரங்கேறிய அடுத்தடுத்த ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி : ஒசூர் அருகே கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்த பெண் கொலை வழக்கில், 3 மாதங்களுக்கு பிறகு குஜராத்தில் கொலையாளியான வடமாநில இளைஞரை கைது செய்து ஒசூர் அழைத்து வந்துள்ளனர் போலீசார். கள்ளக்காதலில் டார்ச்சர் தாங்க முடியாததால் பெண்ணை கொலை செய்ததாக கூறியிருக்கிறார் வட மாநில தொழிலாளி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த ஆஞ்சினம்மா (எ) மேரியம்மா கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி மண்வெட்டியால் வெட்டிக்கொல்லப்பட்டிருந்தார்.

கொலையாளியை பிடிக்க முடியாமல் மத்திகிரி போலீசார் திணறி வந்த நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு வடமாநில இளைஞரை குஜராத்தில் கைது செய்துள்ளனர். கொலையாளியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கொடூர கொலை

கொடூர கொலை

கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் உள்ள வீட்டில் ஆஞ்சினம்மா என்கிற மேரியம்மா உயிரிழந்த அன்று அருகே இருந்த 2 வீடுகளில் 3 செல்போன்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. திருடப்பட்ட செல்போன்களின் ஐஎம்இஐ நம்பரை கொண்டு போலிசார் டிராக் செய்ததில் அந்த செல்போன்கள் ஒரிசா மாநிலத்தில் பயன்படுத்தி வந்ததால், கொலையான பெண்ணின் வீட்டிற்கு அருகே உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்த ஒரிசா மாநில இளைஞர் கொலைக்கு பிறகு ஊருக்கு சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குஜராத்தில் தலைமறைவு

குஜராத்தில் தலைமறைவு

கொலையாளி ஒரிசாவை சேர்ந்த சோமு(எ) பிரமோத் ஜனா( என்பது உறுதி செய்யப்பட்டது. குற்றவாளியை பிடிக்க மத்திகிரி எஸ்ஐ சிற்றரசு தலைமையிலான போலீசார் ஒரிசா சென்றபோது, கொலையாளி குஜராத் தப்பியதால் போலிசாரின் நீண்ட தேடுதலுக்கு பின் குஜராத் மோர்பி என்னும் பகுதியில் இருந்த பிரமோத் ஜனாவை போலீசார் கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர்.

 கள்ளதொடர்பு

கள்ளதொடர்பு

ஒசூர் வந்த கொலையாளியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் 43வயதான ஆஞ்சிலம்மாவுடன் 22 வயதான பிரமோத் ஜனா என்பவருக்கு கள்ளதொடர்பு இருந்ததாகவும், இது தொடர்பான தகராறில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கலுகுண்டா பள்ளி பகுதியில் வசித்து வந்த ஆஞ்சினம்மா கணவரை இழந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் கூலி வேலை செய்து வந்த சோனு ஆஞ்சினம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

3 மாதம் தலைமறைவு

3 மாதம் தலைமறைவு

இதை அடுத்து இருவருடைய பழக்கம் அதற்கடுத்து எல்லை மீறி கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இதனை தொடர்ந்து அடிக்கடி ஆஞ்சினம்மாவீட்டுக்கு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் சோனு. மேலும் அவ்வப்போது காஞ்சி நம்மாளுக்கு பணமும் கொடுத்து வந்திருக்கிறார். இந்த நிலையில் தான் கடந்த செப்டம்பர் மாதம் மேரியம்மா வீட்டில் கொடூரமான நிலையில் கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் நீண்ட கால தேர்தலுக்குப் பிறகு சோனு கைது செய்யப்பட்டார்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

போலீசார் நடத்திய விசாரணையில் தனக்கும் அவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். கொலை நடந்த அன்று சோனுவும் ஆஞ்சினம்மாவும் மது அருந்தி இருக்கின்றனர். அப்போது பணம் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சோனு வீட்டில் இருந்த மண்வெட்டியை எடுத்து அவரை கொடூரமாக அடித்துக் கொலை செய்ததாகவும் இதை அடுத்து போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் தலைமறைவானதை ஒப்புக் கொண்டிருக்கிறார். இதை அடுத்து சோனு தற்போது சிறையில் அடைத்துள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

English summary
In the case of the murder of a woman living alone near Osur, after 3 months in Gujarat, a young man from the northern state was arrested and brought to Osur. police. A laborer from a northern state has said that he killed the woman because he could not bear the torture of cheating
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X