கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெரிய மயில் ஓவியம் கிருஷ்ணகிரியில் கண்டெடுப்பு.. தமிழகத்திலேயே பெரியது!

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த தமிழகத்திலேயே பெரிய மயிலின் ஓவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    கிருஷ்ணகிரியில் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்திலேயே பெரிய மயில் ஓவியம் கண்டுபிடிப்பு

    கிருஷ்ணகிரி, வெங்கடாபுரம் முன்னாள் தலைவர் ஆறுமுகம் சுப்பிரமணி மற்றும் ஊர்மக்கள் அழைப்பின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியகமும், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து தலைவர் நாரயணமூர்த்தி தலைமையில் ஒரு பிரமாண்டமான செங்காவி மயில் ஓவியத்தை உள்ளடக்கிய ஓவியத்தொகுதியை கண்டறிந்தது.

    இந்த செங்காவி ஓவியம் குறித்து, கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் திரு கோவிந்தராஜ் அவர்கள் கூறியதாவது: கிருஷ்ணகிரி அருகேயுள்ள ஆஞ்சநேயர் மலையின் உச்சிப் பகுதியில், கிருஷ்ணகிரி மாவட்ட பாறை ஓவியங்களிலேயே மிக முக்கியமான பாறை ஓவியத் தொகுதி கண்டறியப்பட்டுள்ளது.

    ராமேஸ்வரத்தில் முகாமிட்டுள்ள விஜயகாந்த்... குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ள 'திலஹோமம்' ராமேஸ்வரத்தில் முகாமிட்டுள்ள விஜயகாந்த்... குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ள 'திலஹோமம்'

    முக்கியமானது

    முக்கியமானது

    செந்சாந்து ஓவியம் புதிய கற்கால கலாச்சாரங்களை கொண்டதாக உள்ளது. இறந்தவரை போல இதுவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. 9 அடி நீளமுள்ள செங்காவி நிற வண்ணத்தில் மயில் ஓவியம், பாய்ந்து வரும் மாடு, உடும்பு, கழுதைப்புலி ஓவியங்கள் மிகச்சிறப்பாக உள்ளன.

    பிற்காலம்

    பிற்காலம்

    இத்தோடு கொக்கு, குரங்கு, மான் போன்ற விலங்குகள் பிற்காலத்தில் புதிய கற்காலம் தொடங்கி பெருங்கற்காலம் வரை மக்களின் முக்கிய வாழ்விடமாக இருந்திருக்க வேண்டும் என்றார். இதில் உள்ள இக்கழுதைபுலி உருவம் பற்றி காப்பாட்சியர் கோவிந்தராஜ் குறிப்பிடும்போது அலங்காரத்துடன் இந்த ஓவியமானது காணப்படுவதால் இது ஒரு கற்பனை உருவமாய் இருக்கலாம். இத்தகைய கற்பனை உருவங்கள் சிந்து சமவெளி முத்திரைகளிலும் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

    மலை அடிவாரம்

    மலை அடிவாரம்

    வரலாற்று ஆய்வாளர் கிருஷ்ணகுமார் அவர்கள் கூறுகையில், இம்மலையில் 2000 ஆண்டுகளாக குரங்குகள் இருந்திருந்ததால் மலை உச்சியில் வெண்சாந்திலான குரங்கின் உருவமும், மலை அடிவாரத்தில் இன்றும் உள்ள ஏரியில் அன்று அவர்கள் பார்த்த மான் மற்றும் கொக்கின் உருவத்தையும் அழகாக வரைந்துள்ளார்கள். இவை வாழ்வியலுடன் தொடர்புடையது.

    செங்காவி ஓவியம்

    செங்காவி ஓவியம்

    இதுவரை தமிழ்நாட்டில் கண்டறியப்படாத 9 அடி நீளமுடைய செங்காவி ஓவியமாக மயில் தோகை, கொண்டை, அலகு போன்றவை அழகாக தெரியும் வண்ணம் வரையப்பட்டுள்ளது. இது செங்காவி நிறத்தில் வரையப்பட்ட பறவை ஓவியங்களில் இந்தியாவிலேயே பெரியதாக இருக்கக் கூடும். மேலும் ஒரு புலியின் உருவமும் வரையப்பட்டுள்ளதாக கூறினார். இவ்ஓவியத் தொகுதி பற்றிய ஆய்வு தேவை எனவும் கூறினார்.

    4 உருவங்கள்

    4 உருவங்கள்

    தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன் கூறுகையில், உடும்பு மிகச்சிறப்பான ஆய்வுக்குறி செங்காவி ஓவியத்தொகுதியாகும். இதில் மேற்பகுதியில் ஒரு உடும்பின் ஓவியம் மிகச்சிறப்பாக வரையப்பட்டுள்ளது. பாய்ந்து செல்லும் வகையில் மாடு காட்டப்பட்டுள்ளது. கை உருவமும் வரையப்பட்டுள்ளது. அதன் அருகே தெளிவற்ற நிலையில் 4 உருவங்கள் காணப்படுகின்றன எனவும் கூறினார்.

    English summary
    Big Peacock's art was found in Krishnagiri which was 5000 years old one.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X