கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹெல்மட்டும் போடல.. இதுல ஓவர்டேக் ஆசை வேற.. 2 பைக் மோதி 4 பேரும் தூக்கி வீசப்பட்ட ஷாக் வீடியோ

2 பைக்குகள் மோதி ஒருவர் பலியான விபத்து சிசிடிவி வெளியாகி உள்ளது

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: ஹெல்மட் போடாமல் வந்ததே தப்பு.. இதுல பஸ்ஸை ஓவர் டேக் பண்ண போய்.. பைக்கில் வந்த 4 பேருமே தூக்கி வீசப்பட்டுள்ளனர்.. இது சம்பந்தமான அதிர்ச்சி வீடியோவும் வெளியாகி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பைக்கில் 2 பேர் வந்தனர்.. மோகன் என்பவர் ஓட்டிவந்தார்.. இவர்கள் ஹெல்மட் போடவில்லை.

தேன்கனிக்கோட்டை அருகே பெண்ணாங்கூர் என்ற இடத்தில், ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது.. அந்த பஸ்ஸுக்கு பின்னாடிதான் மோகன் பைக் சென்றது.. ஆனால், பஸ்ஸை ஓவர்டேக் செய்து செல்ல விரும்பி, வேகமாக பைக்கை திருப்பினார்.

பைக்குகள்

பைக்குகள்

அப்போது எதிரே ஒரு பைக் வந்ததை இவர்கள் கவனிக்கவில்லை.. அந்த பைக்கில் 2 பேர் வந்துகொண்டிருந்தனர். 2 பைக்குகளும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன. இதில் பைக்குகளில் இருந்த 4 பேருமே தூக்கி வீசப்பட்டனர்.

சிகிச்சை

சிகிச்சை

பைக்கை ஓட்டி வந்த மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.. இவர் பாஞ்சாலியை சேர்ந்தவர்.. மற்ற 3 பேரும் படுகாயமடைந்த உயிருக்கு போராடினர்.. அவர்கள் மீட்கப்பட்டு, ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சி

நேருக்கு நேர் பைக்குகள் மோதும் இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி.. அனைவருக்கும் அதிர்ச்சையை தந்து பதற வைத்துள்ளது. பார்ப்பதற்கு அவ்வளவு பிஸியாக அந்த ரோடு இல்லை.. இத்தனைக்கும் பெட்ரோல் பங்க் ஒன்றும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

விசாரணை

விசாரணை

ரோட்டில் ஒன்றிரண்டு வாகனங்கள்தான் சென்று கொண்டிருக்கின்றன.. அதனால்தான் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் பைக்கை ஓட்டி வந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
2 bikes collapsed and one died on the spot in thenkanikottai near hosur and this shocking cctv footage goes viral on socials now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X