கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓசூரில் இந்து மகாசபா மாநில செயலாளர் படுகொலை.. ஆறு பேர் கும்பல் வெறிச்செயல்

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், இந்து மகாசபா மாநிலச் செயலாளர், ஆறு பேர் கொண்ட கும்பலால், அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அனுமந்த நகர் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ்(45). இவர், இந்து மகாசபா என்ற அமைப்பின் மாநிலச் செயலாளராக இருந்து வந்தார்.

In Hosur, a state secretary of the Hindu Mahasabha hacked to death

நாகராஜ் தனது வீட்டின் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த ஆறு பேர் கொண்ட கும்பல், நாகராஜை வழிமறித்து, விரட்டி விரட்டி சரமாரியாக வெட்டினர். தலையிலும் அடிவயிற்றிலும் பலத்த காயம் ஏற்பட்ட நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த ஓசூர் காவல் துணைக் கண்காணிப்பாளா் முரளி, மேலும் ஓசூர் காவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இந்த கொலைக்கு பின்னால் எந்த மத அல்லது அரசியல் நோக்கமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது நாகராஜ் செய்துவந்த ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ள போட்டி காரணமாக நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்" என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

இன்று முதல் சென்னையில் மின்சார ரயில்களில் பெண்கள் பயணிக்க அனுமதி.. தெற்கு ரயில்வேஇன்று முதல் சென்னையில் மின்சார ரயில்களில் பெண்கள் பயணிக்க அனுமதி.. தெற்கு ரயில்வே

சில மாதங்களுக்கு முன்பு, நாகராஜ் தனது உயிருக்கு அச்சுறுத்தலை உணர்ந்ததால் பாதுகாப்பு கோரி போலீஸ் அதிகாரிகளிடம் மனு அளித்தபோது, போலீசார் அவருக்கு பாதுகாப்பு மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

கொலையாளிகளை கைது செய்ய ஆறு சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி பாண்டி கங்காதர் தெரிவித்தார். "கொலைக்கு காரணம் இன்னும் அறியப்படவில்லை. இறந்த நாகராஜ்க்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளார்கள்.

English summary
In Hosur, Krishnagiri district, the incident in which the state secretary of the Hindu Mahasabha was hacked to death by a mob of six people has come as a shock.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X