• search
கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

15 வயசு பிஞ்சு.. முதலில் 55 வயசு தாத்தா.. பிறகு மேஸ்திரி, மாப்பிள்ளையும் சேர்ந்து.. ஷாக் கிருஷ்ணகிரி

|

கிருஷ்ணகிரி: 55 வயசு தாத்தாவுக்கு 15 வயசு பொண்ணு கேட்குதா? அந்த குழந்தையை கல்யாணம் செய்து கொள்வதாக சொல்லி பலமுறை சீரழித்துள்ளார்.. இதைவிட கொடுமை, 10 மாசத்தில் மொத்தம் 3 பேர் அந்த பிஞ்சுவை நாசம் செய்துள்ளனர் என்பதுதான்!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே குண்டபலப்பட்டி கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர்தான் இந்த 15 வயது சிறுமி.. தாய் மாமா வீட்டில் தங்கி 10ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.

krishnagiri 17 year old girl rape case, 2 arrested

நடுநடுவே அம்மா வீட்டிற்கும் வந்துபோவார்.. இந்நிலையில், ஒருநாள் திடீரென இந்த பெண்ணின் வயிறு பெரிதானது.. இதை பார்த்த குடும்பத்தினர், குழந்தைக்கு வயிற்றில் ஏதோ கட்டி இருப்பதாக நினைத்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அப்போதுதான் டாக்டர்கள் சிறுமி 8 மாசம் கர்ப்பம் என்று சொன்னார்கள்.. இதை கேட்டதும் குடும்பத்தினருக்கு மயக்கமே வந்துவிட்டது... பிறகு, பெண்ணிடமே இதை பற்றி கேட்டனர்.. அப்போதுதான் அவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பம் - இரட்டை சகோதரர்களுக்கு முதல்வர் பாராட்டு

மாமா வீட்டில் தங்கி படித்தபோது, உதயணன் என்பவர் அங்கு அடிக்கடி வருவாராம்.. அவருக்கு 55 வயசு.. கூட்டுறவு சங்க முன்னாள் ஊழியராம்.. தினமும் தண்ணி அடித்துவிட்டு, பலமுறை ஜாலியாக இருந்துள்ளதாக கூறினார்.. இதனால், 55 வயசு தாத்தா உதயணனை பிடித்து விசாரித்தபோதுதான் உண்மையை கக்கிவிட்டார்.. பிறகு அவரை அந்த பகுதி மக்கள் அடித்து உதைத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

இதை பற்றி சிறுமி சொல்லும்போதே இன்னொரு ஷாக் தகவலை சொன்னார்.. மேலும் 2 பேர் தன்னை பலாத்காரம் செய்தார்கள் என்றார்.. அதாவது இந்த 10 மாசத்தில் மட்டும் 3 பேர் இந்த குழந்தையை தினமும் மிரட்டி மிரட்டியே பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.. அவர்கள் பெயர் ராமராஜ், சக்தி என்பதாகும். அதனால் அவர்களை தேடி போலீஸ் சென்றது.

அப்போதுதான், இதில் சக்தி என்பவருக்கு அன்று கல்யாணம் நடப்பதாக இருந்தது, மணமேடையில் மாலையும் கழுத்துமாக நின்று கொண்டிருந்தார்.. அவரை அப்படியே கோழி அமுக்குவது போல போலீசார் அமுக்கினர்.. மாப்பிள்ளையை மாமியார் வீட்டுக்கு கொண்டு சென்றதால், இன்னொரு பெண்ணின் வாழ்க்கையும் இதன்மூலம் தப்பியது. அதேபோல, சம்பந்தப்பட்ட ராமராஜ் என்பவரை தேடி வருகிறார்கள்.

இப்போது அந்த சிறுமியை ஒரு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.. வயிற்றில் உள்ள சிசுவை கலைக்க முடியாது என்கிறார்கள்.. கலைத்தால், சிறுமியின் உயிருக்கு ஆபத்தும் என்றும் சொல்கிறார்கள்.. அதனால் போலீசார் டாக்டர்களிடம் இதை பற்றி ஆலோசனை கேட்டு வருகிறார்கள்.

ஒரு பெண்ணை 10 மாசமாக 3 பேர் நாசம் செய்ததுகூட தெரியாமல், 8 மாசம் வயிற்றில் குழந்தை வளருவதுகூட தெரியாமல், குடும்பத்தினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை.. பொதுவாக, வயசுக்கு வந்த பெண்ணை தங்கள் பெற்றோர்கள் தங்கள் பாதுகாப்பிலேயே வைத்திருக்க வேண்டியது ரொம்ப அவசியமாகிறது.. பச்சிளம் பெண் குழந்தையாக இருந்தாலும் விட்டுவைக்காத காமுகர்களிடம் இருந்து எந்நேரமும் அவர்களை கண்காணிக்க வேண்டி உள்ளது.. இனியாவது பெண் குழந்தைகளை கண்காணித்து, அவர்களிடம் நெருக்கமாக மனம் விட்டு பேசினாலே பாதி பிரச்சனை இருக்காது!

 
 
 
English summary
krishnagiri 17 year old girl rape case, 2 arrested
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X