கிருஷ்ணகிரி அருகே பயங்கர விபத்து.. டிராக்டர் கவிழ்ந்து 6 பெண்கள் உடல் நசுங்கி பலி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த மஞ்சுகொண்ட பள்ளி என்ற இடத்தில் டிராக்டர் கவிழ்ந்து 6 பெண்கள் உடல் நசுங்கி பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்.

கர்நாடக மாநிலம் கனகபுரம் பகுதியில் இருந்து கோவிலுக்கு செல்வதற்காக சுமார் 30க்கும் மேற்பட்டோர் டிராக்டரில் வந்தனர். அவர்களின் டிராக்டர். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே மஞ்சுகொண்ட பள்ளி என்ற இடத்தில் வந்த போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மொத்தம் இந்த விபத்தில் 6 பெண்கள் பலியாகி உள்ளனர். 25 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்தவர்களை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.