கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீல் சேரிலிருந்து கட்டிலுக்கு ஷிப்ட் ஆக.. உதவி கேட்ட கொரோனா நோயாளியை கீழ் தள்ளிவிட்ட ஊழியர்- வீடியோ

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உள்நோயாளியை சக்கர நாற்காலியில் இருந்து கீழே தள்ளிவிட்ட ஊழியர் குறித்த வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது.

Recommended Video

    வீல் சேரிலிருந்து கட்டிலுக்கு ஷிப்ட் ஆக.. உதவி கேட்ட கொரோனா நோயாளியை கீழ் தள்ளிவிட்ட ஊழியர்- வீடியோ

    தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 3.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சென்னையில் குறைந்த கொரோனா தொற்று மற்ற மாவட்டங்களில் அதிகமாக பரவி வருகிறது.

    இந்த நிலையில் கொரோனாவுக்கு ஒரு சில அரசு மருத்துவமனைகளில் நல்ல சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றால் ஒரு சில மருத்துவமனைகளில் அலட்சியமே மிஞ்சுகிறது.

    தனியாக இருந்த பெரியம்மா.. தலையை வெட்டி சாய்த்த மகன்.. கிருஷ்ணகிரி அருகே பயங்கரம்!தனியாக இருந்த பெரியம்மா.. தலையை வெட்டி சாய்த்த மகன்.. கிருஷ்ணகிரி அருகே பயங்கரம்!

    உள்நோயாளி

    உள்நோயாளி

    கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் ஒரு நபரை, மருத்துவமனை ஊழியர் ஒருவர் சக்கர நாற்காலியில் அழைத்து வந்து, கட்டில் அருகே நிறுத்துகிறார். பிறகு சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து கட்டிலுக்கு செல்லுமாறு நோயாளியை மருத்துவமனை ஊழியர் வற்புறுத்துகிறார்.

    கீழே தள்ளிய கொடூரம்

    கீழே தள்ளிய கொடூரம்

    ஆனால், நோயாளியால் தாமாக எழுந்து கட்டிலுக்கு செல்ல முடியவில்லை. அதனால், அவர் மருத்துவமனை ஊழியரை உதவிக்கு அழைக்கிறார். ஆனால், மருத்துவமனை ஊழியரோ, நோயாளியிடம் ஒருமையில் பேசி தகராறு செய்ததுடன், சக்கர நாற்காலியில் இருந்து கீழே தள்ளி விட்டு சென்று விடுகிறார்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    அருகில் இருந்த ஒருவர், இதுதொடர்பான காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து வாட்ஸ்அப்பில் பலருக்கும் அனுப்பியுள்ளார். வாட்ஸ் அப்பில் வைரலாகி வரும் இந்த வீடியோ பதிவுகள், பார்த்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

    கொடூர பிடி

    கொடூர பிடி

    கொரோனா வைரஸின் கொடூர பிடியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து சேவை செய்து மருத்துவப் பணியாளர் களுக்கு மத்தியில் இதுபோன்ற ஒரு சிலரின் செய்கை அனைத்து தரப்பினரையும் முகம் சுளிக்க வைக்கிறது.

    English summary
    An employee in Krishnagiri Government Hospital misbehaves with a corona patient by pushing him from Wheel chair.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X