கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவால் ஜான் அளவு வளர்ச்சி அடைந்த கிருஷ்ணகிரி... நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தக்க வைக்குமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election 2019 : Krishnagiri Constituency |கிருஷ்ணகிரி தொகுதியின் களநிலவரம்| Oneindia Tamil

    சென்னை: தமிழகத்தின் மிகவும் பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்று கிருஷ்ணகிரி. இந்த தொகுதியில் தொழில் வளம் இருந்தாலும் கூட அது தொடர்ந்து பின்னணியிலேயே இருந்து வருவது துரதிர்ஷ்டவசமானது.

    எல்லா நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அனைத்து கட்சிகளும் வியூகம் வகித்து வரும் நிலையில் கிருஷ்ணகிரி மட்டும் என்ன விதிவிலக்கா என்ன?

    தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு இந்த தொகுதியானது ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 தொகுதிகளையும் உள்ளடக்கியது ஆகும்.

    92 விவாதங்கள்

    92 விவாதங்கள்

    இந்த தொகுதியின் எம்பியாக அதிமுகவை சேர்ந்த கே அசோக் குமார் உள்ளார். இவர் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டவர். 65 வயதாகும் இவர் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். இவர் இதுவரை 92 விவாதங்களில் பங்கேற்றுள்ளார்.

    வாக்காளர்கள்

    வாக்காளர்கள்

    இதுவரை 402 கேள்விகளை கேட்டுள்ளார். இவரது வருகை பதிவு 89 சதவீதம் ஆகும். இங்கு மொத்தம் 13,79,957 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுள் 705,468 ஆண் வாக்காளர்களும், 674,489 பெண் வாக்காளர்களும் அடக்கம்.

    தோல்வி

    இந்த தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற அசோக்குமார் 480, 491 வாக்குகளையும் அவரை எதிர்த்துபோட்டியிட்ட திமுகவின் சின்ன பில்லப்பா 273,900 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.

    3 முறை வெற்றி

    3 முறை வெற்றி

    இந்த தொகுதியில் காங்கிரஸ், திமுக, அதிமுக என மாறி மாறி வெற்றி பெற்றுள்ளனர். மொத்தம் 8 முறை காங்கிரஸ் கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களே அதிகபட்சமாக வெற்றி பெற்றுள்ளனர். அதற்கடுத்த இடத்தில் திமுக உள்ளது. அதிமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது.

    3ஆவது பெரிய கட்சி

    3ஆவது பெரிய கட்சி

    கடந்த 2014-ஆம் ஆண்டு தமிழகத்தில் வெற்றி பெற்ற எம்.பிக்களில் 37 பேர் அதிமுகவினர் ஆவர். அதிமுக 3-ஆவது பெரிய கட்சி என்ற சாதனையை பெற்றது. இது போல் இந்த தேர்தலிலும் இந்த சாதனையை படைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    மாற்றம்

    மாற்றம்

    கடந்த முறை கிடைத்த சாதனை அனைத்தும் ஜெயலலிதாவால் கிடைத்தது. தற்போது அவர் இல்லாததாலும் அவர் மரணம் தொடர்பான சர்ச்சைகள் நிலவுவதாலும் இந்த தொகுதியின் முடிவுகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    English summary
    Know detailed information on Krishnagiri Lok Sabha Constituency like election equations, sitting MP, demographics, election history, performance of current sitting MP, 2014 election results and much more about Krishnagiri Loksabha Seat.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X