கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிருஷ்ணகிரியில் கொள்முதல் செய்ய ஆளில்லை.. 2 ஆயிரம் லிட்டர் பாலை கல்குவாரியில் கொட்டிய வியாபாரி

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யாததால் வியாபாரி ஒருவர் கல்குவாரியில் பாலை கொட்டினார். இல்லாதவர்களுக்காவது கொடுத்திருக்கலாமே என சமூகஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

Recommended Video

    தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யாததால் கல் குவாரியில் பாலை கொட்டிய வியாபாரி - வீடியோ

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பாலேகுளி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ். இவர் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து பாலை பெற்றுச் சென்று, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்வது வழக்கம்.

    ஆனால் இப்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால், தனியார் நிறுவனங்கள் பாலை கொள்முதல் செய்வது 50 சதவீதம் அளவுக்கு குறைத்துக் கொண்டன.

    கடைசியில் கடைசியில் "கடவுளை" கையில் எடுத்த திமுக.. இன்ப அதிர்ச்சியில் இந்துக்கள்.. கை கொடுப்பாரா முருகன்?!

    பால் நிறுவனங்கள்

    பால் நிறுவனங்கள்

    இந்த நிலையில் மாதேஷ், விவசாயிகளிடமிருந்து பெற்றுச் சென்ற 2 ஆயிரம் லிட்டர் பாலை கொள்முதல் செய்ய தனியார் நிறுவனம் மறுத்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரி மாதேஷ், வேறு சில தனியார் பால் நிறுவனங்களை அணுகி உள்ளார்.

    பால் கெட்டு போகும்

    பால் கெட்டு போகும்

    அவர்களும் பாலை கொள்முதல் செய்யவில்லை. இரு தினங்கள் சுற்றித் திரிந்த பிறகும் பாலை கொள்முதல் செய்ய எவரும் முன் வராததால் பால் கெட்டுப் போகும் நிலை உருவானது. இதற்கு மேலும் வைத்து கொண்டிருந்தால் பால் தாங்காது என மாதேஷ் கருதினார்.

    வாட்ஸ் ஆப்

    வாட்ஸ் ஆப்

    இதையடுத்து வேறு வழியின்றி பாலேகுளி பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் 2 ஆயிரம் லிட்டர் பாலையும் கீழே கொட்டி அழித்தார். இந்த வீடியோ காட்சிகளை நண்பர்கள் மூலம் பதிவு செய்த மாதேஷ், அதனை வாட்ஸ் அப் குழுக்களில் பதிவிட்டுள்ளார்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யாததால், 2 ஆயிரம் லிட்டர் பாலை கல்குவாரியில் கீழே கொட்டி அழித்த சம்பவம், விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலை குவாரியில் கொட்டுவதற்கு பதிலாக அதன் தரத்தை சோதனை செய்து இல்லாதவர்களுக்கு கொடுத்திருக்கலாமே என சமூகவலைதளங்களில் ஒரே பேச்சாக உள்ளது.

    English summary
    Krishnagiri Milk trader pours milk in stone quarrying because company has not procured the milk.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X