கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தனியாக இருந்த பெரியம்மா.. தலையை வெட்டி சாய்த்த மகன்.. கிருஷ்ணகிரி அருகே பயங்கரம்!

பெரியம்மாவை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: நிலப்பிரச்சனை இருந்ததாம்.. அதற்காக தனியாக இருந்த பெரியம்மாவின் தலையை வெட்டி சாய்த்துவிட்டார் மகன் முத்துவேல்.. இந்த கொடுமை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது.

போச்சம்பள்ளி அடுத்த என்.தட்டக்கல் என்ற கிராமத்துக்கு பக்கத்தில் பூசாரிகொட்டாய் என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வருபவர் செல்வம்.. இவர் ஒரு விவசாயி.. இவரது மனைவி துளசி.. 50 வயதாகிறது.

krishnagiri: son murdered his mother due to land issue

அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் முத்துவேல்.. 28 வயதாகிறது.. சம்பவத்தன்று மதியம் துளசி நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.. அப்போது திடீரென முத்துவேல், பின்னாடியே வந்து துளசியின் கழுத்தை வெட்டிவிட்டார்.. இதில் அங்கேயே சரிந்து விழுந்து துளசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

துளசியுடன் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் இதை பார்த்து அலறி அடித்து ஓடினர்.. தகவலறிந்து நாகரசம்பட்டி போலீசாரும் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர்.. ஆனால், அதற்குள் முத்துவேல் எஸ்கேப் ஆகிவிட்டார்.

போலீசார் துளசியின் சடலத்தை கைப்பற்றி தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. முத்துவேல், துளசி இரு குடும்பத்தினரும் உறவினர்கள்.. துளசி முத்துவேலுக்கு பெரியம்மா ஆவார்.. இவர்களுக்குள் ரொம்ப காலமாகவே பாகப்பிரிவினை செய்வதில் பிரச்சனை இருந்ததாக தெரிய வருகிறது.

சகோதரத்துவம், சமாதானம், பேணுவோம்... இஸ்லாமியர்களுக்கு கே.எஸ்.அழகிரி பக்ரீத் வாழ்த்துசகோதரத்துவம், சமாதானம், பேணுவோம்... இஸ்லாமியர்களுக்கு கே.எஸ்.அழகிரி பக்ரீத் வாழ்த்து

இதில் சுமூக முடிவு எட்டப்படாததால்தான், ஆத்திரமடைந்த முத்துவேல் தனியாக இருந்த பெரியம்மா கழுத்தை கத்தியால் வெட்டியது தெரியவந்தது. இது சம்மந்தமாக நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துவேலை தேடி வந்த நிலையில், நேற்று தற்போது கைது செய்துள்ளனர்.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.

English summary
krishnagiri: son murdered his mother due to land issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X