கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சசிகலாவை விமர்சிப்பது ஆரோக்கியமா இருக்காது".. அன்று தினகரன் மீது- இன்று சசி மீது முனுசாமிக்கு பரிவு

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: தான்தான் பொதுச் செயலாளர் என சசிகலா இதுவரை கூறியதே இல்லையே என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி தெரிவித்தார்.

ஆவல்நத்தம் பகுதியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் சசிகலா எந்த வகையிலும் எங்களுக்கு தொடர்பு இல்லாதவர்.
சசிகலாவை பற்றி விமர்சனம் செய்வது ஆரோக்கியமாக இருக்காது.

நான் தான் பொது செயலாளர் என சசிகலா கூறியதாக நான் கேள்விபடவில்லை, ஊடகங்கள் தான் அவ்வாறு கூறுகிறது. சசிகலா ஊர்வலம் நாடே தெரிவதற்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என அனைவருக்கும் தெரியும்.

சசிகலா

சசிகலா

நான் தான் பொது செயலாளர் என சசிகலா கூறியதாக நான் கேள்விபடவில்லை, ஊடகங்கள் தான் அவ்வாறு கூறுகிறது. சசிகலா ஊர்வலம் நாடே தெரிவதற்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என அனைவருக்கும் தெரியும்.

தேர்தல்

தேர்தல்

ஜெயலலிதாவால் துரோகி என அடையாளம் காட்டப்பட்டவர் தினகரன். தினகரன் தன்னை நிலைபடுத்திகொள்ள பல்வேறு வகையான தகிடுதத்தம் செய்துகொண்டு இருக்கிறார். கூட்டணியில் யார் வருகிறார்கள் என்பது முக்கியம் இல்லை. திமுக அரசு மக்களுக்கு செய்த சேவைகளை முன்னிறுத்தி தான் தேர்தலை சந்திக்கிறோம்.

பாஜக கொள்கை

பாஜக கொள்கை

அதிமுக கொள்கை வேறு பாஜக கொள்கை வேறு, பாஜக கூட்டணியில் வருகிறார்கள் நாங்கள் எங்களது சேவைகளை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கிறோம் என்றார் முனுசாமி. சசிகலா சிறையிலிருந்து வெளியே வருவதாக தகவல்கள் வெளியானவுடன் ஒரு சிலரே அவரை விமர்சித்தனர்.

அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்டோரே சசிகலாவையும் தினகரனையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். கடந்த முறை பேட்டி அளித்த முனுசாமி, தினகரன் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டால் அமமுக அதிமுக இணைப்பு குறித்து தலைமை பரிசீலனை செய்யும் என தெரிவித்திருந்தார். இன்றைய பேட்டியிலும் சசிகலாவை வெளிப்படையாக அவர் விமர்சிக்கவில்லை.

English summary
ADMK Deputy Organiser Munusamy says that criticising Sasikala is not healthy politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X