கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அட நாராயணா.. பெருமாளுக்குத்தான் எத்தனை எத்தனை சோதனைகள்.. இப்போது ஆற்றுக்குள் கேம்ப்!

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: அட நாராயணா!! மார்க்கண்டேய ஆற்றுப்பாலத்தை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், நடு ஆற்றில் பெருமாள் சிலை வைக்கப்பட்டு உள்ளது.

வந்தவாசி அருகே கொரக்கோட்டையில் உள்ள மலையை செதுக்கி 64 அடி உயர பிரமாண்ட பெருமாள் சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலையை பெங்களூரில் உள்ள ஈஜிபுரா பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நிறுவப்படுகிறது.

அதற்காக ஒரே கல்லில் அமைந்த பிரமாண்டமான மகாவிஷ்ணு சிலை வாகனத்தில் கொண்டு செல்ல தயாரானது. இந்த சிலையை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் புறப்பட்டது. கிளம்பும்போதே ஏகப்பட்ட பிரச்சனைகள். வெயிட் தாங்காமல் வெடித்தன.

2 என்ஜின்கள்

2 என்ஜின்கள்

ஒவ்வொரு இடையூறாக சரி செய்த இப்போது பெருமாள் சிலை கிருஷ்ணகிரி வழியாக கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலையை அடைந்தது. ஆனால் வழியில் நிறைய மண் சாலைகள் இருந்ததால், தற்காலிகமாக சாலை அமைக்கும் பணி நடந்து முடிந்து, 2 என்ஜின்களும் பொருத்தப்பட்டு லாரி கிளம்பியது.

சமன்படுத்தப்பட்டது

சமன்படுத்தப்பட்டது

ஆனால் லாரி பாதி தூரம் அந்த சாலை மேடாக இருந்தது. அதனால், லாரியின் டயர்கள் சுற்றும்போது முன்னால் இருந்த என்ஜின்கள் மேலே தூக்கியது. இதையடுத்து லாரி நிறுத்தப்பட்டு, அந்த சாலையும் சமன்படுத்தப்பட்டு மீண்டும் பெருமாள் சிலை கிளம்பியது.

10 அடி உயரம்

10 அடி உயரம்

ஆனால் இப்போது குருபரப்பள்ளியில் அருகே மார்க்கண்டேய நதியின் பாலம் உள்ளது. அதிக பாரம் உடைய பெருமாள் சிலையை இந்த பாலத்தை கடந்து கொண்டு போக முடியாது என கூறப்பட்டது. அதனால் இந்த பகுதியிலும் மண் சாலை 100 மீட்டர் நீளத்திற்கு 10 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டு லாரி இயக்கப்பட்டது.

கற்கள், மண்

கற்கள், மண்

ஆனால், மண் சாலையில் பிடிப்பு இல்லாததால் சக்கரம் மீண்டும் சுற்ற ஆரம்பித்துவிட்டது. இதனால் நடு ஆற்றிலேயே பெருமாள் சிலை நிறுத்தப்பட்டுள்ளது. என்ஜின்களை அதிகமாக கொண்டு வந்து லாரியை இயக்குவதா? அல்லது கற்கள், மண்ணை போட்டு சாலையை மேலும் உயர்த்தி லாரியை இயக்குவதா என ஆலோசனை நடைபெறுகிறது.

நடு ஆற்றில் பெருமாள்

நடு ஆற்றில் பெருமாள்

நடு ஆற்றில் சிலை வைக்கப்பட்டு விட்டதால் ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்தி பெருமாளை சேவித்துவிட்டு செல்கின்றனர்.

English summary
The Mega Perumal statue is being delayed to bring Bangalore to the city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X