கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பேசாம தைலாபுரம் வாங்க.. நல்லா டிரெய்னிங் எடுத்துக்கங்க.. சரியா.. ஸ்டாலினை கலாய்க்கும் ராமதாஸ்

கிருஷ்ணகிரியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம் செய்தார்.

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: "ஸ்டாலின் பேச்சுகள் மகா மட்டமா இருக்கு.. என்ன பேசறது, என்ன பேசக்கூடாதுன்னே தெரியல.. தைலாபுரத்தில் நாங்கள் பயிலரங்கம் நடத்துகிறோம்.. வேணும்னா அங்கு வந்து அவர் பயிற்சி எடுத்துக்கலாம்" என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சிகளை ஆதரித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

PMK Founder Dr Ramadoss campaigned in Krishnagiri

இந்த முறை பிரச்சாரத்தில் ராமதாசிடம் ஒரு கேஷூவல் பேச்சு இருக்கிறது.. ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல், டென்ஷன் இல்லாமல் கூலாக பேசி வருகிறார். ஆனால் வாக்கு சேகரிக்கும் கூட்டங்களில் எல்லாம் கட்டாயம் திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாகவே விமர்சித்து வருகிறார்.

ஸ்டாலின் நாக்கில் சனி இருக்கிறதா என்று தருமபுரி கூட்டத்தில் கேட்டவர், ஸ்டாலினின் பேச்சுகள் மகா மட்டமாக இருக்கிறது என்று கிருஷ்ணகிரி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி அதிமுக வேட்பாளர் கேபி முனுசாமி, சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணன் ஆகியோரை ஆதரித்து டாக்டர் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியபோது, "ஸ்டாலின் தூங்கும்போதும், நடக்கும்போதும் முதலமைச்சர் கனவுதான்! என்னையும் முதல்வரையும் ரொம்பவும் தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார்.

தேர்தல் முடிந்ததும், தமிழக அரசுக்கு ஆபத்தா? புயலை கிளப்பிய சர்வே தேர்தல் முடிந்ததும், தமிழக அரசுக்கு ஆபத்தா? புயலை கிளப்பிய சர்வே

அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட திமுகவை முடிச்சு வெக்க போவது இப்போதைய தலைவர் முக ஸ்டாலின்தான்! ஏன்னா.. அவரது செயல்பாடுகள், பேச்சுக்கள் அந்த அளவிற்கு மகா மட்டமாக இருக்கு. என்ன பேசணும், என்ன பேசக்கூடாது? என்பது அவருக்கு இன்னும் தெரியவில்லை. தைலாபுரம் தோட்டத்தில் நாங்க அரசியல் பயிலரங்கம் நடத்தறோம். அவர் விருப்பப்பட்டால், அங்கு வந்து பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்" என்றார்.

English summary
PMK Founder Dr Ramadoss campaigned in Krishnagiri for ADMK Candidate KP Munusamy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X