கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தடையை மீறி நள்ளிரவில் வேல் யாத்திரை.. பாஜக மாநில செயலாளர் மீசை அர்சுணன் உள்ளிட்ட 50 பேர் கைது

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: தடை மீறி நள்ளிரவில் கிருஷ்ணகிரியில் இருந்து திருச்செந்தூருக்கு வேல் யாத்திரைக்கு சென்ற பாஜக மாநில செயலாளர் மீசை அர்சுணன் உள்ளிட்ட 50 பேரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்.

Recommended Video

    தடை மீறி நள்ளிரவில் வேல் யாத்திரை.. பாஜக மாநில செயலாளர் மீசை அர்சூணன் உள்ளிட்ட 50 பேர் கைது - வீடியோ
    Police arrested 50 people, including BJP state secretary Meesai Arsunan over vel yathra

    தமிழகத்தில் தாமரையை மலர வைக்கும் வகையில் கடந்த மாதம் 6-ம் தேதி முதல் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் எல்.முருகன் வேல் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

    Police arrested 50 people, including BJP state secretary Meesai Arsunan over vel yathra

    அவருக்கு ஆதரவளிக்கும் வகையில் கிருஷ்ணகிரியில் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் மீசை அர்சுணன் உள்ளிட்ட 50-க்கு மேற்பட்டவர்கள் 10-க்கு மேற்பட்ட வாகனங்கள் மூலம் திருச்செந்தூருக்கு கிருஷ்ணகிரி வழியாக ஆவின் மேம்பாலம் வழியாக வேல் பாத்திரைக்கு புறப்பட்டனர்.

    Police arrested 50 people, including BJP state secretary Meesai Arsunan over vel yathra

    இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி டவுன் காவல்துறையினர் விரைந்து சென்று ஆவின் மேம்பாலம் தாண்டி அவர்களை தடுத்து நிறுத்தினார்கள், பின்னர் தடை மீறி வேல் யாத்திரைக்கு சென்ற மாவட்ட செயலாளர் அருள் கிரானைட், ரவிசந்திரன், காளிரத்தினம், ரவி, ஜெயசந்திரன், முருகேசன், பிரபாகரன், சேகர், கிரி, சினி, குமரேசன், சரவணன், ஆனந்தன், சுரேஷ், ரஞ்சித் உங்ளிட்ட 50-க்கு மேற்பட்ட வேல் யாத்திரைக்கு சென்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையினரால் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட பாஜகவினர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டனர்.

    English summary
    Police arrested 50 people, including BJP state secretary Meesai Arsunan, who were on vel yathra, from Krishnagiri to Thiruchendur at midnight, and detained them in a private hall.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X