கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஜிலா டீச்சருக்கு இது தேவையா.. மலை வாழ் குழந்தைகளை.. முட்டி போட வைத்து.. ஜெபம் செய்ய சொல்லி!

குழந்தைகளை முட்டி போட்டு ஜெபம் செய்ய வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: மலைவாழ் குழந்தைகளை முட்டி போட வைத்து, ஜெபம் செய்ய வைத்துள்ளார் விஜிலா என்ற ஒரு ஸ்கூல் ஹெச்.எம்... இந்த விஷயம் வெடித்து கிளம்பியதை அடுத்து அந்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

    மலை வாழ் குழந்தைகளை.. முட்டி போட வைத்து.. ஜெபம் செய்ய சொல்லி!

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ளது சின்னகுத்தி என்ற மலைக்கிராமம்... இந்த கிராமத்தை சுற்றி முழுக்க காடுகள்தான்.. இங்கு வசித்து வரும் மலைவாழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    prayer meeitng: gov school head mistress suspended near krishnagiri

    இந்த பகுதியில் செயல்பட்டு வரும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துள்ளனர்.. இந்த பள்ளியில் மொத்தம் 37 குழந்தைகள் படித்து வருகிறார்கள்.. இந்த ஸ்கூலுக்கு கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த விஜிலா என்ற ஒரே ஒருத்தர்தான் ஆசிரியர் & தலைமை ஆசிரியை எல்லாம்!

    இந்நிலையில், தொற்று காரணமாக அனைத்து ஸ்கூல்களும் மூடப்பட்டது போலவே இந்த ஸ்கூலும் மூடப்பட்டது.. ஆனால் விஜிலா ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்தி, ஒரு கிறிஸ்டியன் குழுவினரை அழைத்து வந்துள்ளார்.. சின்னகுட்டி கிராமத்தில் அவர்களை அழைத்து ஜெபம் செய்ய வைத்துள்ளார்.. அந்த ஜெபக்கூட்டத்துக்கு பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளை அழைத்து சென்றுள்ளார்.

    குழந்தைகள் அனைவரையும் முட்டிபோட வைத்து ஜெபக்கூட்டம் நடத்தியுள்ளார்.. கிறிஸ்து பாடல்களை பாடவும் முயற்சி செய்துள்ளார்.. இந்த ஜெபக்கூட்டத்தை 5 பெண்கள், 2 ஆண்கள் நடத்துகின்றனர்.. ஜெபக்கூட்டத்துக்கு வரும்படி பொதுமக்களையும் கூப்பிட்டுள்ளனர்.. இது சம்பந்தமாக 6 நிமிடம் ஓடும் வீடியோ வெளியானபிறகுதான் இந்த விஷயமே பூதாகரமாக வெடித்தது.

     பரபரப்பு.. குக்கருக்குள் மாட்டி கொண்ட குழந்தை.. பாத்திரம் ரிப்பேர் பண்றவர் வந்து மீட்டதால் நிம்மதி! பரபரப்பு.. குக்கருக்குள் மாட்டி கொண்ட குழந்தை.. பாத்திரம் ரிப்பேர் பண்றவர் வந்து மீட்டதால் நிம்மதி!

    அந்த வீடியோவில் ஒருத்தரும் மாஸ்கையும் போடவில்லை.. இதையடுத்து விசாரணை நடத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.விசாரணையில்தான், விஜிலா வெளிஆட்களை அழைத்து வந்து ஜெபக்கூட்டம் செய்ததுடன், மலைவாழ் மக்களை மத மாற்றம் செய்ய முயற்சித்ததும் தெரியவந்தது. இறுதியாக விஜிலா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.. உடந்தையாக இருந்த ஏனுசோனை அரசுப் பள்ளி ஆசிரியர் டீச்சர் செல்விக்கு மெமோ தரப்பட்டுள்ளது.

    English summary
    prayer meeitng: gov school head mistress suspended near krishnagiri
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X