கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கிருஷ்ணகிரி அருகே ஆதி மனிதர்கள் வாழ்ந்த கல் திட்டைகள்- தொல்லியல் துறை ஆய்வு நடத்த கோரிக்கை

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள கெங்கலேரி மலை அடிவாரத்தில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததாக கருதப்படும் கல்திட்டைகள் இருப்பதால் அதுகுறித்து தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended Video

    கிருஷ்ணகிரி அருகே ஆதி மனிதர்கள் வாழ்ந்த கல் திட்டைகள்- தொல்லியல் துறை ஆய்வு நடத்த கோரிக்கை

    கிருஷ்ணகிரி அருகே உள்ள கெங்கலேரி மலையின் அடிவாரத்துக்கு செல்லும் மண்பாதையில், மாந்தோப்பின் நடுவே மிகவும் பழமையான, பத்து அடிக்கு பத்து அடி அளவும், சுமார் இரண்டு முதல் மூன்று அடி கனம் கொண்ட, கல் திட்டை உள்ளது.

    Public demands archaeological excavation near krishnagiri

    இன்னமும் பழமை மாறாமல் கம்பிரமாக இருக்கும் இந்த கல்திட்டை குறித்து, அப்பகுதி மக்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். மேலும் கங்கலேரி கிராமத்தில் காணப்படும் இந்த கல்திட்டையை சுற்றிலும் முட்புதர்போல் செடிகள், மரங்களின் வேர்கள் கொண்டு மூடப்பட்டுள்ளது.

    இந்த கல் திட்டையின் உள்ளே புதையல் இருப்பதாகவும் கிராம மக்களிடையே நம்பிக்கை உள்ளதால், இரவு நேரங்களில் கல்திட்டையை சுற்றி புதையல் தேடுதலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பழமை வாய்ந்த இந்த கல்திட்டை சிதலமடையும் நிலை உருவாகி உள்ளது.

    திணறும் சென்னை.. திணறும் சென்னை.. "எல்லையை இழுத்து மூடுங்க.. கடும் கட்டுப்பாடுகள் தேவை".. ஒரே குரலில் வாசகர்கள் !

    மேலும் இந்த கல்திட்டைகளில் குள்ள மனிதர்கள் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. ஆகையால் பழமை வாய்ந்த இந்த குகையை சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாக்க தெல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English summary
    Public had demanded archaeological excavation near krishnagiri Kengaleri hill.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X